ADDED : செப் 19, 2024 10:05 PM
வால்பாறை: வால்பாறையில் தென்மேற்கு பருவமழைக்கு பின், சீதோஷ்ண நிலை மாற்றத்தால் மக்களுக்கு சளி, காய்ச்சல், இருமல் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
பல்வேறு இடங்களில் சாக்கடை கால்வாய் சுத்தப்படுத்தப்படாமல் உள்ளது. இதனால் கொசுத்தொல்லையும் அதிகரித்து வருகிறது.
மக்கள் கூறுகையில், 'வால்பாறை நகரில் கடந்த மூன்று மாதங்களாக பெய்த மழையினால், நகரில் பல்வேறு இடங்களில் தண்ணீர் தேங்கியுள்ளது. சாக்கடை கால்வாயும் சுத்தப்படுத்தப்படாமல் உள்ளது.
குடியிருப்பு பகுதியை சுற்றிலும் சாக்கடை நீர் ஓடுவதால், கொசுத்தொல்லை அதிகரித்துள்ளது. நடைபாதை முழுவதும் வழுக்கல் நிறைந்து காணப்படுகிறது.
நகராட்சி சார்பில் கொசு மருந்து அடிப்பதுடன், வழுக்கல் நிறைந்த பகுதியில் பிளீச்சிங் பவுடர் துாவ வேண்டும். நகராட்சி சார்பில் சிறப்பு மருத்துவ முகாம் நடத்த வேண்டும்,' என்றனர்.