/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
வேலைக்கு ஆந்திரா சென்றார் தாய்: ரோட்டில் நின்ற 4 வயது சிறுமி மீட்பு

ADDED : நவ 14, 2025 10:14 PM
தொண்டாமுத்தூர்: சுண்டக்காமுத்தூர், பி.எண்டு எல். காலனியை சேர்ந்தவர் முத்துகனி,37. இவரின் சகோதரி பச்சையம்மாள், 4 வயது பெண் குழந்தையுடன், அந்த பகுதியின் அருகில் உள்ள, எம்.ஜி.ஆர். நகரில் வசித்து வந்தார்.
கடந்த மாதம், பச்சையம்மாள் வேலைக்காக, ஆந்திர மாநிலம் சென்றுவிட்டார். 4 வயது குழந்தையை, தனது அக்கா முத்துகனியிடம் ஒப்படைத்து சென்றுள்ளார். தாயின் நினைவால், சிறுமி தினமும் அழுது வந்துள்ளார். நேற்று மாலை, வீட்டில் விளையாடிக்கொண்டிருந்த சிறுமி, வீட்டில் இருந்து வெளியே சென்றுள்ளது.
சுண்டக்காமுத்தூர் அரசு மருத்துவமனைக்கு செல்லும் வழியில், தனியாக நின்று கொண்டிருந்த சிறுமியை கண்ட பொது மக்கள், பேரூர் போலீசாருக்கு தகவல் தெரிவித்துள்ளனர். விரைந்து சென்ற போலீசார், சிறுமியை மீட்டு, போலீஸ் ஸ்டேஷனுக்கு துாக்கி சென்றனர். விசாரணை நடத்தியதில், அம்மாவை பார்க்க, எம்.ஜி.ஆர். நகரில் இருந்த வீட்டில் இருந்து, வெளியேறி செல்லும்போது, வழிதவறி நின்றது தெரியவந்தது.
சிறுமியின் பெரியம்மா முத்துகனியை வரவழைத்து, தாய் பச்சையம்மாளிடம் மொபைல் போனில் பேசி உறுதிபடுத்திய போலீசார், சிறுமியை முத்துக்கனியுடன் அனுப்பி வைத்தனர்.