தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ ஆரோக்கிய அன்னை தேர்த்திருவிழா

ஆரோக்கிய அன்னை தேர்த்திருவிழா

ஆரோக்கிய அன்னை தேர்த்திருவிழா


ADDED : செப் 21, 2026 06:12 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 21, 2026 06:12 PM


Follow on Google
அ நிறம் | அளவு

மேட்டுப்பாளையம்: சிறுமுகையில் உள்ள புனித ஆரோக்கிய அன்னையின் தேவாலயத்தில், தேர்த்திருவிழா நடந்தது.

கடந்த, 13ம் தேதி தேர்த்திருவிழா கொடியேற்றம் நடந்தது. கருமத்தம்பட்டி ஜெபமாலை அன்னை தியான இல்ல இயக்குநர் பாதிரியார் அலெக்ஸ் ஆண்டனிசாமி தலைமை வகித்து, மாதா உருவம் பொறித்த கொடியை ஏற்றி வைத்தார். 18ம் தேதி வரை தினமும் மாலை, 6:00 மணிக்கு பாதிரியார்கள் திருப்பலியை நிறைவேற்றி, மறையுரை ஆற்றினர்.

நேற்று முன்தினம், வேண்டுதல் தேர்பவனி நடைபெற்றது. மாலையில் பாதிரியார் ஹென்றி டேனியல் தலைமையில் தேர் திருவிழா திருப்பலி நடந்தது. தொடர்ந்து ஆரோக்கிய அன்னை, அலங்காரத் தேரில் பவனிவ ந்தார். தேர், சிறுமுகை நகரின் முக்கிய வீதிகள் வழியாக சென்று, மீண்டும் ஆலயத்தை அடைந்தது. இறுதியில் திவ்ய நற்கருணை ஆசீர் வழங்கப்பட்டது. விழா ஏற்பாடுகளை பங்கு பாதிரியார் பால் சகாயராஜ் மற்றும் பங்கு மக்கள் செய்திருந்தனர்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us