/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தீ விபத்தில் ஓட்டு வீடு எரிந்து சேதம்
/
தீ விபத்தில் ஓட்டு வீடு எரிந்து சேதம்
ADDED : செப் 28, 2025 08:14 AM
நிறம் மற்றும் எழுத்துரு அளவு மாற்ற
அன்னுார் : குப்பனுார் ஊராட்சி, ஆலாங்குட்டை காலனியில் ஓட்டு வீட்டில் குடும்பத்துடன் வசிப்பவர் ஜெகநாதன், 35; விவசாய கூலி தொழிலாளி. நேற்று முன்தினம் இரவு குடும்பத்துடன் வெளியே சென்றிருந்தார். திடீரென வீட்டின் ஒரு அறையில் தீப்பிடித்து, மளமளவென பரவியது. அன்னுார் தீயணைப்பு நிலைய அலுவலர் பாலச்சந்திரன் தலைமையில் ஐந்து வீரர்கள் மற்றும் உள்ளூர் பொதுமக்கள் ஒன்றரை மணி நேரம் போராடி தீயை அணைத் தனர்.
தீயால் வீட்டின் ஓடுகள் உடைந்து, மேற்கூரை முழுவதும் சேதமடைந்து கீழே விழுந்தது. துணிகள், சமையல் பொருட்கள், அலமாரிகள், நாற்காலி என அனைத்தும் தீயில் கருகின. சம்பவம் குறித்து போலீசார் விசாரிக்கின்றனர்.