/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தெரு விளக்குகள் இல்லாமல் இருளில் வாகன ஓட்டிகள் அவதி
/
தெரு விளக்குகள் இல்லாமல் இருளில் வாகன ஓட்டிகள் அவதி
தெரு விளக்குகள் இல்லாமல் இருளில் வாகன ஓட்டிகள் அவதி
தெரு விளக்குகள் இல்லாமல் இருளில் வாகன ஓட்டிகள் அவதி
ADDED : ஜூன் 05, 2025 01:14 AM

தொண்டாமுத்தூர்; கோவையின் மேற்கு புறநகர் பகுதியான தொண்டாமுத்தூர் வட்டார பகுதியில், சிறுவாணி மெயின் ரோடு, தொண்டாமுத்தூர் ரோடு ஆகியவை முக்கிய சாலைகளாக உள்ளன.
சாலைகள் கல்லூரிகள், குடியிருப்புகள் மற்றும் முக்கிய கோவில்கள், சுற்றுலா தலங்களுக்கு செல்லும் வழித்தடமாக உள்ளதால், சாலைகளில் நாள்தோறும் ஆயிரக்கணக்கான வாகனங்கள் சென்று வருகின்றன.
இந்நிலையில், சிறுவாணி மெயின் ரோட்டையும், தொண்டாமுத்தூர் மெயின் ரோட்டையும் இணைக்கும் சாலையாக மாதம்பட்டி --- தொண்டாமுத்தூர் சாலை உள்ளது.
மொத்தம் உள்ள 4 கிலோமீட்டர் சாலை, மாதம்பட்டி ஊராட்சி, பேரூர் பேரூராட்சி, தாளியூர் பேரூராட்சி, தொண்டாமுத்தூர் பேரூராட்சி ஆகிய உள்ளாட்சி நிர்வாகங்களின் எல்லைக்குட்பட்ட பகுதியாக உள்ளது.
இதில், தாளியூர் பேரூராட்சிக்குட்பட்ட பகுதியில், சரஸ்வதி பார்ம் முதல் தொண்டாமுத்தூர் வாய்க்கால் வரை, உள்ள சுமார், 2 கி.மீ., சாலையில், தெருவிளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது.
இப்பகுதியில், சாலையின் இருபுறமும் தோட்டங்கள் என்பதால், இரவு நேரங்களில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இதனால், இவ்வழியாக, இருசக்கர வாகனங்களில் பயணிக்கும் பெண்கள் மற்றும் வாகன ஓட்டுனர்கள், இருளில் சிரமப்படுகின்றனர். எனவே, இப்பகுதியில் உடனடியாக தெருவிளக்குகள் அமைக்க வேண்டும்.