/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
லாரியில் செல்லும்மலை ரயில் இன்ஜின்
/
லாரியில் செல்லும்மலை ரயில் இன்ஜின்
ADDED : ஜூன் 22, 2025 11:32 PM

மேட்டுப்பாளையம்: ஊட்டி மலை ரயில் இன்ஜினில் உள்ள பழுதுகளை சரி செய்ய, டிரெய்லர் லாரியில் திருச்சிக்கு கொண்டு செல்கின்றனர்.
மேட்டுப்பாளையத்தில் இருந்து தினமும் காலை, 7:15 மணிக்கு, நீராவி இஞ்சின் வாயிலாக, ஊட்டிக்கு மலை ரயில் இயக்கப்படுகிறது. இதில் சுற்றுலா பயணிகள் பயணம் செய்து வருகின்றனர். இந்த மலை ரயிலில் பயன்படுத்தும் பெட்டிகளையும், நீராவி இன்ஜின்களையும், மூன்று ஆண்டுகளுக்கு ஒரு முறை, பழுதுகள் நீக்கி புதுப்பிப்பது வழக்கம். இதற்காக ரயில் இன்ஜின்கள், பெட்டிகளை திருச்சி பொன்மலையில் உள்ள, ரயில்வே பணி மனைக்கு அனுப்பப்படும்.
அந்த வகையில் ஊட்டி மலை ரயிலில் பயன்படுத்திய இன்ஜினில் உள்ள பழுதுகளை நீக்கி, புதுப்பிக்க, 24 சக்கரங்கள் கொண்ட டிரெய்லர் லாரியில், இன்ஜின் ஏற்றப்பட்டு உள்ளது. மேட்டுப்பாளையத்தில் இருந்து திருச்சிக்கு, டிரெய்லர் லாரியில் ரயில் இன்ஜின் கொண்டு செல்லப்படுகிறது.