/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கமாராஜர் குறித்து அவதுாறு; பேச்சு எம்.பி., சிவா மன்னிப்பு கேட்கணும்: பல்வேறு அமைப்பினர் வலியுறுத்தல்

ADDED : ஜூலை 20, 2025 10:38 PM
பொள்ளாச்சி; 'காமராஜர் பற்றி அவதுாறாக பேசிய எம்.பி., சிவா மன்னிப்பு கேட்க வேண்டும்,' என, காமராஜர் பேரவை, நாடார் சங்கம் வலியுறுத்தி உள்ளது.
பொள்ளாச்சி வட்டார சிறு வியாபாரிகள் சங்கம், காமராஜர் பேரவை நிர்வாகிகள் அறிக்கை வருமாறு:
காமராஜரை விமர்சிக்கும் தகுதி எம்.பி., சிவா மட்டுமல்ல, யாருக்கும் இல்லை. கண்ணியம், நீதி, நேர்மை, உண்மை, எளிமை, வலிமையுடன் வாழ்ந்தவர்.
காமராஜர் இரவு துாக்கத்திலேயே இறந்தார். அவர், எவர் கையை பிடித்தும், பேசுவதற்கும் வாய்ப்பில்லை. உடனடியாக அவர் மன்னிப்பு கேட்க வேண்டும். இவ்வாறு, தெரிவித்துள்ளனர்.
வட்டார நாடர் சங்கத்தினர் அறிக்கை:
காமராஜர் மின்விசிறி இல்லாவிட்டால் கூட படுத்து துாங்கிவிடுவார். எளிமையானவர், எந்த காலத்திலும் ஆடம்பரத்தை விரும்பவில்லை. அவர் முதல்வராக இருந்த போது, 'ஏசி' காரை கூட பயன்படுத்த மறுத்து விட்டார்.
காமராஜர் வரலாறு குறித்து தெரியாமல் வாய்க்கு வந்தபடி பேசிய எம்.பி., சிவாவை வன்மையாக கண்டிக்கிறோம். உடனடியாக பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும். இல்லையெனில், தமிழகம் முழுவதும் நாடார் அமைப்புகள் திரண்டு எம்.பி., சிவாவுக்கு எதிராக கண்டன ஆர்ப்பாட்டம் நடத்த வேண்டிய நிலை வரும். இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.