/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'முதல்வர் கோப்பை' கால்பந்து: கோல் மழை பொழிந்த வீரர்கள்
/
'முதல்வர் கோப்பை' கால்பந்து: கோல் மழை பொழிந்த வீரர்கள்
'முதல்வர் கோப்பை' கால்பந்து: கோல் மழை பொழிந்த வீரர்கள்
'முதல்வர் கோப்பை' கால்பந்து: கோல் மழை பொழிந்த வீரர்கள்
ADDED : செப் 19, 2024 11:07 PM

கோவை: கல்லுாரி மாணவர்களுக்கான முதல்வர் கோப்பை கால் பந்து இறுதிப்போட்டிக்கு ஸ்ரீ நாராயண குரு கல்லுாரி அணியும், பி.எஸ்.ஜி., கல்லுாரி அணியும் தகுதி பெற்றன.
பாரதியார் பல்கலையில் கல்லுாரி மாணவர்களுக்கான 'முதல்வர் கோப்பை' கால் பந்து போட்டிகள் கடந்த, 17ம் தேதி முதல் நடந்துவருகிறது. இதில், 64 அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுகளை அடுத்து நடந்த அரையிறுதி போட்டியில், ஸ்ரீ நாராயண குரு கல்லுாரியும், சி.எம்.எஸ்., கல்லுாரி அணியும் மோதின.
பரபரப்பாக விளையாடிய நாராயண குரு கல்லுாரி மாணவர்கள் மூன்று கோல்களை அடித்தனர். ஆனால், சி.எம்.எஸ்., கல்லுாரி அணி, கோல் எண்ணிக்கையை துவங்காது, 3-0 என, தோல்வியை தழுவியது.
இரண்டாம் அரையிறுதி போட்டியில் பி.எஸ்.ஜி., கலை அறிவியல் கல்லுாரி அணியும், ஸ்ரீ கிருஷ்ணா கலை அறிவியல் கல்லுாரி அணியும் மோதின. இதில், பி.எஸ்.ஜி., கல்லுாரி மாணவர்கள் மூன்று கோல்கள் அடித்த நிலையில், கிருஷ்ணா கல்லுாரி மாணவர்கள் கோல் அடிக்காது தோல்வியை சந்தித்தனர்.
இறுதிப்போட்டிக்கு, ஸ்ரீ நாராயண குரு கல்லுாரி அணியும், பி.எஸ்.ஜி., கல்லுாரி அணியும் தகுதி பெற்றன.