/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பல லட்சம் ரூபாய் மோசடி வாலிபர் சிறையிலடைப்பு
/
பல லட்சம் ரூபாய் மோசடி வாலிபர் சிறையிலடைப்பு
ADDED : பிப் 22, 2024 02:51 AM

கோவை:பணம் வழங்கும் செயலி வாயிலாக கடன் பெற்றுத் தருவதாக, தமிழகம் முழுதும் பலரிடம் பல லட்சம் ரூபாய் மோசடி செய்த நபரை, மாநகர சைபர் கிரைம் போலீசார் சிறையில் அடைத்தனர்.
நாமக்கல் மாவட்டம், செல்லம்பட்டியை சேர்ந்தவர் சதீஸ், 34. எம்.ஏ., பொருளாதார பட்டதாரி. இவர் சமூக வலைதளங்களில், 'கேஷ் பே' செயலி வாயிலாக லோன் பெற்றுத் தருவதாகவும், ஆவணங்கள் தேவையில்லை எனவும் விளம்பரம் செய்திருந்தார். அதை பார்த்த ஏராளமானோர், அவரை தொடர்பு கொண்டனர்.
இதையடுத்து அவர் கடன் பெறுவதற்காக, செயல்பாட்டு கட்டணமாக குறிப்பிட்ட தொகையை பெற்றார். ஆனால், யாருக்கும் கடன் பெற்றுத் தரவில்லை. பாதிக்கப்பட்டவர்கள் கோவை மாநகர சைபர் கிரைம் போலீசாரிடம் புகார் அளித்தனர். வழக்குப் பதிந்த போலீசார், சதீசை சிறையில் அடைத்தனர்.
கோவை மாநகர சைபர் கிரைம் போலீஸ் அலுவலர் ஒருவர் கூறுகையில், 'கைது செய்யப்பட்ட நபர், மாநிலம் முழுதும் பல்வேறு மாவட்டங்களில் இதுபோன்ற மோசடியில் ஈடுபட்டுள்ளார். இரு ஆண்டுகளாக அவர் மோசடியில் ஈடுபட்டு வந்துள்ளார்' என்றார்.