/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மம்ஸ், சின்னம்மை பாதிப்பு சுகாதாரத்துறை எச்சரிக்கை
/
மம்ஸ், சின்னம்மை பாதிப்பு சுகாதாரத்துறை எச்சரிக்கை
மம்ஸ், சின்னம்மை பாதிப்பு சுகாதாரத்துறை எச்சரிக்கை
மம்ஸ், சின்னம்மை பாதிப்பு சுகாதாரத்துறை எச்சரிக்கை
ADDED : மார் 27, 2025 11:18 PM
மேட்டுப்பாளையம்: கோவை மாவட்டத்தில் பள்ளி குழந்தைகளுக்கிடையே பொண்ணுக்கு வீங்கி என்னும் மம்ஸ், சின்னம்மை, தட்டம்மை போன்ற நோய்கள் அதிகரித்து வருகிறது. குழந்தைகள், நோய் எதிர்ப்பு சக்தி குறைவாக உள்ளவர்கள், இந்த நோய்களால் அதிக அளவில் பாதிக்கப்படுகின்றனர்.
சுகாதார துறையினர் கூறியதாவது: இந்த நோய் தொற்றுகள் பரவுவதை கட்டுப்படுத்துவதற்காக, நோய் தொற்று ஏற்பட்டவர்களை தனிமைப்படுத்த வேண்டும். அறிகுறிகள் தென்படும் பட்சத்தில், உடனடியாக மருத்துவரை அணுகி ஆலோசனை பெற வேண்டும்.
குழந்தைகளுக்கு வழக்கமான தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளதா என பெற்றோர்கள் உறுதி செய்ய வேண்டும். அடிக்கடி கைகளை சுத்தப்படுத்துதல், இருப்பிடத்தை சுத்தமாக வைத்திருத்தல் போன்றவற்றை கடைபிடிக்க வேண்டும்.
பள்ளி குழந்தைகளிடம் சந்தேகத்திற்கு இடமான அறிகுறிகள் அல்லது நோய் தொற்று ஏற்பட்டால், உடனடியாக சுகாதாரத்துறைக்கு தகவல் தெரிவிக்க வேண்டும். இவ்வாறு கூறினார்.
---

