/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பொது சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க நகராட்சி அறிவுரை
/
பொது சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க நகராட்சி அறிவுரை
பொது சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க நகராட்சி அறிவுரை
பொது சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க நகராட்சி அறிவுரை
ADDED : நவ 04, 2025 08:59 PM
பொள்ளாச்சி: 'பொள்ளாச்சி நகராட்சியில் பொது சுகாதார நடைமுறைகளை கடைபிடிக்க வேண்டும். தவறினால் அபராதம் விதிக்கப்படும்,' என, நகராட்சி கமிஷனர் தெரிவித்தார்.
பொள்ளாச்சி நகராட்சி கமிஷனர் குமரன் அறிக்கை:
பொள்ளாச்சி நகராட்சி துாய்மை பணியாளர்கள் தினமும் வீடுவீடாக குப்பை சேகரிக்க வருகின்றனர். அவர்களிடம், மக்கும், மக்காத குப்பை என தரம் பிரித்து வழங்க வேண்டும். தரம் பிரித்து வழங்காமல் பொது இடங்களில் குப்பை கொட்டுவோர் மீது திடக்கழிவு மேலாண்மை விதிகளின் படி அபராதம் விதிக்கப்படும்.
வீடுகளில் பயன்படுத்திய பழைய உபயோகமற்ற பிளாஸ்டிக் கழிவுகள், மரக்கழிவுகள், தலையனை, மெத்தை, தெர்மாக்கோல், அட்டை போன்ற மொத்தமாக உருவாகும் கழிவுகளை பொது இடங்களில் துாக்கி எரியாமல் நகராட்சி துாய்மை பணியாளர்களிடம் ஒப்படைக்க வேண்டும்.
பொதுமக்கள் தங்களுடைய இரண்டு, நான்கு சக்கர வாகனங்களை வீடுகளுக்கு முன்புறம், சாலையோரங்களில் நிறுத்தி வைக்கின்றனர். இதனால், அப்பகுதியில் குப்பை தேக்கமடைவதுடன், துாய்மை பணியாளர்கள் அவற்றை அகற்ற இயலாத நிலை உள்ளது.
எனவே, பொதுமக்கள் தங்களது வாகனங்களை வீட்டு வளாகத்துக்குள் பாதுகாப்பாக நிறுத்திக்கொள்ள வேண்டும். மேலும், தங்களது வீடு, சுற்றுப்புறங்களில் தண்ணீர் தேங்காதவாறு பராமரித்து கொசுக்கள் உருவாவதை தடுத்து டெங்கு காய்ச்சல் பாதிப்பிலிருந்து பாதுகாத்துக்கொள்ள வேண்டும்.
பொது சுகாதார நடைமுறைகளை தவறாமல் கடைபிடிக்க வேண்டும். மீறினால், தமிழ்நாடு பொது சுகாதார சட்டம் மற்றும் திடக்கழிவு மேலாண்மை விதிகளின் படி அபராதம் விதிக்கப்படும்.
இவ்வாறு, தெரிவிக்கப்பட்டுள்ளது.

