/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நான்கு வழிச்சாலையில் வெளிச்சமில்லை: இருள் சூழும் பகுதியில் அபாயம்
/
நான்கு வழிச்சாலையில் வெளிச்சமில்லை: இருள் சூழும் பகுதியில் அபாயம்
நான்கு வழிச்சாலையில் வெளிச்சமில்லை: இருள் சூழும் பகுதியில் அபாயம்
நான்கு வழிச்சாலையில் வெளிச்சமில்லை: இருள் சூழும் பகுதியில் அபாயம்
ADDED : நவ 04, 2025 08:59 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அடுத்த, ஆச்சிபட்டி முதல் வடக்கிபாளையம் பிரிவு வரையிலான நெடுஞ்சாலையின் நடுவே உள்ள மையத்தடுப்பில் மின்விளக்குகள் அமைக்க கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சியில் இருந்து உக்கடம் வரை, 40 கி.மீ., துாரத்திற்கு நான்கு வழிச்சாலை அமைக்கப்பட்டுள்ளது. அதில், ஆச்சிபட்டியில் இருந்து, ஈச்சனாரி வரையான, 26.5 கி.மீ., தொலைவுக்கு கான்கிரீட் சாலை உள்ளது. சாலையின் மையப்பகுதியில், தகடு மற்றும் கான்கிரீட் டிவைடரும் அமைக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநர்களுக்கு சாலையின் கட்டமைப்பு தெளிவாக தெரியவும், வாகனம் மற்றும் பாதசாரிகளின் பாதுகாப்பை உறுதி செய்யும் நோக்கிலும், சாலை சந்திப்புகள், இணைப்புப் பகுதிகள், ஆபத்தான பகுதிகளில் மையத்தடுப்பில் மின் விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளது.
ஆனால், ஆச்சிப்பட்டிக்கு அடுத்தாற்போல குறிப்பிட்ட துாரம், மின் விளக்குகள் அமைக்கப்படாமல் உள்ளது. அதேபோல, ஆச்சிப்பட்டியில் இருந்த வடக்கிபாளையம் பிரிவு வரையிலான சாலையின் நடுவேயும் மின்விளக்கு அமைக்கப்படாததால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இப்பகுதியில், மின்விளக்கு அமைக்க கோரிக்கையும் விடுக்கப்பட்டுள்ளது.
வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், ''ஆச்சிப்பட்டி முதல் வடக்கிபாளையம் பிரிவு வரையிலான சாலையில் எவ்வித 'ரிப்ளக்டர்' கிடையாது. இருள் சூழ்ந்து காணப்படுவதால், விபத்து அபாயம் அதிகரிக்கிறது. மையத்தடுப்பின் நடுவே மின் விளக்கு அமைக்க வேண்டும்.
ஆச்சிபட்டியில் இருந்து, பொள்ளாச்சி வரையிலும் மையத்தடுப்பு உயரம் குறைவாக இருப்பதாலும், 'ரிப்ளக்டர்' பொருத்தப்படாததாலும் விபத்து ஏற்படுகிறது. சில சமயங்களில், மைத்தடுப்பு மீதே வாகனங்கள் ஏறி விடுகின்றன. உயரமான மையத்தடுப்பு அமைத்து, சாலைப்பாதுகாப்பு நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும்,' என்றனர்.

