UPDATED : நவ 03, 2026 04:41 PM
ADDED : நவ 03, 2026 04:37 PM
அ நிறம் | அளவு
வால்பாறை: சோலையாறு எஸ்டேட் மாரியம்மன் கோவிலில் முருகன்சிலை பிரதிஷ்டை செய்ய, 48வது நாள் மண்டல பூஜையில் பக்தர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
வால்பாறை அடுத்துள்ளது சோலையாறு எஸ்டேட் மூன்றாம் பிரிவு. இங்குள்ள மாரியம்மன் கோவிலில், ஆண்டு தோறும் பொங்கல் பண்டிகையொட்டி ஒரு வாரம் திருவிழா விமரிசையாக கொண்டாடப்படுகிறது.
இந்நிலையில், கோவில் வளாகத்தில் கடந்த செப். 16ம் தேதி முருகன் சிலை பிரதிஷ்டை செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து, கோவிலில் நாள் தோறும் மண்டல பூஜையும் நடந்தது. விழாவில், 48வது நாள் மண்டல பூஜை விழா நேற்று முன்தினம் மாலை, 6:30 மணிக்கு நடந்தது. முன்னதாக, முருகப்பெருமானுக்கு சிறப்பு அபிேஷக பூஜைகளும், இரவு, 7:00 மணிக்கு சிறப்பு அலங்கார பூஜையும் நடந்தது.
