தொழில் முனைவோராகலாம்: வழிகாட்ட சிறப்பு கருத்தரங்கு
தொழில் முனைவோராகலாம்: வழிகாட்ட சிறப்பு கருத்தரங்கு
ADDED : நவ 03, 2026 04:40 PM
அ நிறம் | அளவு
அன்னூர்: அன்னூர் தாசபளஞ்சிக திருமண மண்டபத்தில், நாளை காலை 10:30 மணிக்கு, பட்டியல் இனத்தை சேர்ந்த படித்த இளைஞர்கள், தொழில் முனைவோர் ஆவதற்கான ஆலோசனை வழங்கும் கூட்டம் நடக்கிறது.
இதில் தாட்கோ அரசு மானியத்துடன் தொழில் முனைவோருக்கான வங்கி கடன் பெற வழிகாட்டுதல் வழங்கப்படுகிறது. தூய்மை காவலர்களுக்கு நலவாரிய அட்டை பெறுவது, ஆதிதிராவிடர் மகளிர் சுய உதவி குழு உறுப்பினர்களுக்கு மானியத்துடன் கூடிய வங்கி கடன் பெறுவது, டாக்டர் அம்பேத்கர் அயலக மேற்படிப்பு படிக்க கல்வி கடன் பெறுவது குறித்து ஆலோசனை வழங்கப்படுகிறது.
