/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
காளான் வளர்ப்பு தொழில்நுட்பம்; வேளாண் பல்கலை ஒப்பந்தம்
/
காளான் வளர்ப்பு தொழில்நுட்பம்; வேளாண் பல்கலை ஒப்பந்தம்
காளான் வளர்ப்பு தொழில்நுட்பம்; வேளாண் பல்கலை ஒப்பந்தம்
காளான் வளர்ப்பு தொழில்நுட்பம்; வேளாண் பல்கலை ஒப்பந்தம்
ADDED : ஆக 01, 2025 09:28 PM
கோவை; தமிழ்நாடு வேளாண் பல்கலையில், உயிரி தொழில்நுட்ப மகத்துவ மையம் - 'காக்ஸ்பிட்' அமைந்துள்ளது. பல்கலை, ஆராய்ச்சி மேம்பாட்டு நிறுவனங்கள், ஸ்டார்ட் அப் நிறுவனங்களுக்கு இடையே புதிய கண்டுபிடிப்புகள், அறிவுசார் தொழில் நுட்பங்களை பகிர்ந்து கொள்ள, இந்த மகத்துவ மையம் உதவுகிறது.
காக்ஸ்பிட் மற்றும் ஷெர்பா பயோடெக் நிறுவனம் இடையே, நவீன காளான் வளர்ப்பு தொழில்நுட்பம் சார்ந்து புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
ஷெர்பா பயோடெக் நிறுவனம், காளான் வளர்ப்பில், ஐ.ஓ.டி., எனப்படும் இன்டர்நெட் ஆப் திங்ஸ் முறையில், காளான் பண்ணை கண்காணிப்பு, சிக்கன நீர்ப்பாசனம், வளர்ச்சி ஊக்கிகள், உறையிடப்பட்ட உர தொழில்நுட்பம் உள்ளிட்டவற்றை மேம்படுத்தும் வகையில், வேளாண் பல்கலையுடன் இணைந்து செயல்பட, இந்த ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டுள்ளது.
நிகழ்வில், பல்கலை துணைவேந்தர் (பொ) தமிழ்வேந்தன், உயிரி தொழில்நுட்ப மகத்துவ மைய இயக்குனர் செந்தில், ஷெர்பா பயோடெக் நிர்வாகி லட்சுமி நாராயணன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.