/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மிலாடி நபி விழாவில் இஸ்லாமியர்கள் பேரணி
/
மிலாடி நபி விழாவில் இஸ்லாமியர்கள் பேரணி
ADDED : செப் 07, 2025 09:16 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சி அருகே, மாப்பிள்ளைகவுண்டன்புதுாரில் மிலாடிநபி விழா மற்றும் ரஹ்மானியா மக்தப் மதரஸா ஆண்டு விழா நடந்தது. அதில், இஸ்லாமிய உரையாடல், வினாடி - வினா போட்டிகள் நடைபெற்றன. மதரஸா மாணவர்கள் பங்கேற்றனர்.
மதுரை மாவட்ட ஜமாஅத்துல் உலமா சபை பொருளாளர் மவுலவி அஹ்மது சாலிஹ் யூசுபி பேசினார். பொதுமக்களுக்கு, கந்துாரி விருந்து வழங்கப்பட்டது. விழா ஏற்பாட்டை பள்ளிவாசல் நிர்வாகம், உஸ்தாத் தமீம் அன்சாரி ஜைனி, கமருன்னிஸா ஆகியோர் செய்திருந்தனர்.
* நபிகள் நாயகம் பிறந்த நாளை முன்னிட்டு, வால்பாறையில் மிலாடி நபி விழா கொண்டாடப்பட்டது. ஆனைமலை ஹில்ஸ் முஸ்லீம் ஜாமாத் சார்பில், மிலாடிநபி விழா வுக்கு மூத்தவல்லி பூங்கோயாதங்கள் தலைமை வகித்தார். மூத்தவல்லி கமாலுதீன் கொடியேற்றி விழாவை துவக்கி வைத்தார். விழாவுக்கு கவுரவ தலைவர் அமீது, தலைவர் குஞ்ஞாலி ஆகியோர் முன்னிலை வகித்தனர். முத்தனுார்தங்கள் செய்யதுசிகபுதீன் பேரணியை துவக்கி வைத்தார். மிலாடி நபி விழாவையொட்டி நடந்த சிறப்பு தொழுகைக்கு பின், இஸ்லாமியர் வால்பாறை நகரின் முக்கிய வீதி வழியாக பேரணி சென்றனர். இதில் கலந்து கொண்ட மதரசா மாணவர்கள் நபிகள் நாயகத்தின் வாழ்க்கை பாடல்களை பாடியபடி நடனமாடி பங்கேற்றனர். தொடர்ந்து பள்ளி வாசலில் அன்னதானம் வழங்கப்பட்டது. அதனை தொடர்ந்து குழந்தைகளின் கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன. விழா ஏற்பாடுகளை ஆனைமலை ஹில்ஸ் முஸ்லீம் ஜமாத் நிர்வாகிகள் செய்திருந்தனர்.