/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சத்துணவு மையத்தில் இயங்கும் ரேஷன் கடை; ஒரே அறையில் செயல்படுவதால் அவதி
/
சத்துணவு மையத்தில் இயங்கும் ரேஷன் கடை; ஒரே அறையில் செயல்படுவதால் அவதி
சத்துணவு மையத்தில் இயங்கும் ரேஷன் கடை; ஒரே அறையில் செயல்படுவதால் அவதி
சத்துணவு மையத்தில் இயங்கும் ரேஷன் கடை; ஒரே அறையில் செயல்படுவதால் அவதி
ADDED : செப் 07, 2025 09:16 PM

வால்பாறை; வால்பாறையில், சத்துணவு மையத்தில் ரேஷன் கடை இயங்குவதால் மக்கள் பொருட்களை வாங்க முடியாமல் தவிக்கின்றனர்.
வால்பாறை தாலுகாவில் மொத்தம், 15,250 ரேஷன் கார்டுகளுக்கு, 42 ரேஷன் கடைகள் வாயிலாக மாதம் தோறும் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன.
இந்நிலையில், ரேஷன் கடைகளில் ஸ்மார்ட் கார்டு நடைமுறைக்கு வந்த பின், பொருட்கள் வாங்க கைரேகை பதிவு கட்டாயமாக்கப்பட்டுள்ளது.
அதன் அடிப்படையில், பொதுமக்களுக்கு கைரேகை பதிவு அடிப்படையில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகின்றன. ரொட்டிக்கடையில் உள்ள சிந்தாமணி ரேஷன் கடையில் மொத்தம், 322 ரேஷன் கார்டுகள் உள்ளன.
இங்குள்ள ரேஷன் கடை இடியும் நிலையில் உள்ளதால், தற்காலிமாக சத்துணவு மையத்தில் ரேஷன் கடை செயல்படுகிறது. இதனால் மக்கள் பொருட்கள் வாங்கி செல்ல முடியாமல் தவிக்கின்றனர்.
பொதுமக்கள் கூறியதாவது:
ரொட்டிக்கடையில் பல ஆண்டுகளாக பழைய கட்டடத்தில் ரேஷன் பொருட்கள் வழங்கப்பட்டன. தற்போது அந்த கட்டடம் இடிந்து விழும் நிலையில் மிக மோசமாக உள்ளது. இதனை தொடர்ந்து, பள்ளி சத்துணவு மையத்தில் தற்காலிகமாக ரேஷன் பொருட்கள் வழங்கப்படுகிறது.
ஒரே அறை கொண்ட இந்த கடைகளில் மக்கள் பொருட்கள் வாங்க பல மணி நேரம் காத்திருக்க வேண்டிய நிலை உள்ளது. மழை, வெயிலின் போது, பொருட்கள் வாங்க முடியாமல் மக்கள் தவிக்கின்றனர்.
எனவே, நகராட்சி சார்பில் ஏற்கனவே உள்ள பழைய ரேஷன் கடையை இடித்து, புதிய ரேஷன் கடை கட்டித்தர வேண்டும்.
இவ்வாறு, கூறினர்.
நகராட்சி அதிகாரிகளிடம் கேட்ட போது, 'ரொட்டிக்கடையில் புதிய ரேஷன் கடை கட்டுவதற்கான டெண்டர் விரைவில் விடப்படும்.
மக்கள் நலன் கருதி விரைவில் இதற்கான பணிகள் மேற்க்கொள்ளப்படும். அது வரை தற்காலிமாக சத்துணவு மையத்தில் ரேஷன் பொருட்கள் வழங்கப்படும்,' என்றனர்.