/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
உடல் அளவுக்கு ஏற்ற சட்டை, பேண்ட் திருடிய மர்ம நபர்கள்
/
உடல் அளவுக்கு ஏற்ற சட்டை, பேண்ட் திருடிய மர்ம நபர்கள்
உடல் அளவுக்கு ஏற்ற சட்டை, பேண்ட் திருடிய மர்ம நபர்கள்
உடல் அளவுக்கு ஏற்ற சட்டை, பேண்ட் திருடிய மர்ம நபர்கள்
ADDED : நவ 11, 2024 06:53 AM
மேட்டுப்பாளையம், : காரமடை வேளாங்கண்ணியில் துணிக்கடை ஒன்றில், தங்களது உடல் அளவுக்கு ஏற்றவாறு சட்டை, பேண்ட்டை பொறுமையாக தேடி எடுத்து திருடி சென்ற மர்ம நபர்கள் குறித்து போலீசார் விசாரித்து வருகிறார்கள்.
மேட்டுப்பாளையம் சேரன் நகரை சேர்ந்தவர் ஹரிசங்கர், 22. இவர் காரமடை அருகே வேளாங்கண்ணி பஸ் ஸ்டாண்டு பகுதியில் துணிக்கடை வைத்து நடத்தி வருகிறார். நேற்று முன் தினம் இரவு வழக்கம் போல் கடையை பூட்டி விட்டு வீட்டிற்கு சென்றார். பின், நேற்று காலை கடைக்கு வந்து பார்த்த போது, கடையின் பின் பக்க கதவு உடைக்கப்பட்டிருந்தது.
கடையில் இருந்த துணி, ஷூ, வெளிநாட்டு வாசனை திரவியம், கூலிங் கிளாஸ் என சுமார் ரூ.20 ஆயிரம் மதிப்பிலான பொருட்களும், கல்லா பெட்டியில் வைக்கப்பட்டிருந்த ரூ.23 ஆயிரம் பணமும் திருடு போனதை கண்டு அதிர்ச்சியடைந்தார்.
இதில் வேடிக்கையான விஷயம் என்ன வென்றால், திருடி சென்ற மர்ம நபர்கள் தங்களது உடல் அளவுக்கு ஏற்றவாறு 32 இடுப்புளவு பேண்ட்கள், சட்டையில் எக்ஸ்.எல்., டபுள் எக்ஸ்.எல், கூலிங் கிளாஸ் என அனைத்துமே அளவு பார்த்து அந்த அளவில் உள்ள துணிகள் அனைத்தையுமே பொறுமையாக தேடி எடுத்து திருடி சென்றுள்ளனர். மற்ற அளவுகளில் பெரிதாக எதுவும் எடுக்காமல் ஒன்று, இரண்டு துணிகளை மட்டும் எடுத்து சென்றுள்ளனர்.
இதுகுறித்து, ஹரிசங்கர் அளித்த புகாரின் பேரில் காரமடை போலீசார் விசாரித்து வருகின்றனர்.---