/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நீரா பானம் தயாரிப்பு குறித்து நபார்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு
/
நீரா பானம் தயாரிப்பு குறித்து நபார்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு
நீரா பானம் தயாரிப்பு குறித்து நபார்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு
நீரா பானம் தயாரிப்பு குறித்து நபார்டு வங்கி அதிகாரிகள் ஆய்வு
ADDED : ஜூன் 22, 2025 11:16 PM

பொள்ளாச்சி: பொள்ளாச்சி அருகே, நீரா பானம் தயாரிப்பு குறித்து, நபார்டு வங்கி மேலாண்மை துணை இயக்குனர் மற்றும் அதிகாரிகள் ஆய்வு செய்தனர்.
பொள்ளாச்சியில், 'ஐஸ் பாக்ஸ்' முறையில், தென்னை மரங்களில் இருந்து, நீரா பானம் உற்பத்தி செய்யப்படுகிறது. நீரா பானத்தை கொண்டு தேன், சர்க்கரை போன்ற மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரிக்கப்படுகிறது.
இந்நிலையில், நபார்டு வங்கியின் மேலாண்மை துணை இயக்குநர் அஜய்குமார் சூட், தமிழ்நாடு மண்டல பொது மேலாளர் ஆனந்த் மற்றும் அதிகாரிகள், நீரா பானம் தயாரிப்பு குறித்து பொள்ளாச்சியில் ஆய்வு செய்தனர்.
வெங்கடேஸ்வரா மற்றும் விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களில் நீரா பானம் உற்பத்தி மற்றும் விற்பனை எவ்வாறு நடைபெறுகிறது; நிறுவனங்கள் பதிவேடுகளை ஆய்வு செய்தனர். நீரா பானத்தை பெரியளவில் சந்தைப்படுத்த நபார்டு வங்கி உறுதுணையாக இருக்கும் என உறுதியளித்தனர்.
வாணவராயர் கல்லுாரி நிறுவன முதல்வர், திட்ட இயக்குனர் மற்றும் வெங்கடேஸ்வரா தென்னை உற்பத்தியாளர் நிறுவன தலைவர் முத்துசாமி, தமிழ்நாடு மாநிலங்களின் தென்னை உற்பத்தியாளர் நிறுவனங்களின் நட்பமைப்பு தலைவர் சக்திவேல், விநாயகா தென்னை உற்பத்தியாளர் நிறுவன தலைவர் பத்மநாபன், நிறுவன இயக்குனர்கள், விவசாயிகள் பங்கேற்றனர்.
அப்போது அதிகாரிகள், நபார்டு வங்கியால் செயல்படுத்தப்படும் திட்டங்கள் குறித்து விளக்கினர். மதிப்புக்கூட்டப்பட்ட பொருட்கள் தயாரித்து நேரடியாக விற்பனைக்கு கொண்டு செல்ல வேண்டும். இதற்கு நபார்டு வங்கி உறுதுணையாக இருக்கும், என, விவசாயிகளிடம் தெரிவித்தனர்.