ADDED : செப் 28, 2026 04:12 PM
அ நிறம் | அளவு
கோவை: கரூர் அருகே தண்டவாள பராமரிப்பு பணிகள் நடப்பதால் இன்றும், அக்., 1ம் தேதியும் கோவை வழி ரயில்களின் இயக்கத்தில் மாற்றம் செய்யப்பட்டுள்ளது. அதன்படி, பாலக்காடு டவுனில் இருந்து காலை 6:30க்கு திருச்சி புறப்படும் எக்ஸ்பிரஸ் ரயில்(16844) புகலுார் ஸ்டேஷனில் நிறுத்தப்படும்; பணிகள் முடிந்த பின் முன்பதிவில்லா சிறப்பு ரயிலாக திருச்சி வரை இயக்கப்படும்.
அதேபோல், கோவையில் இருந்து காலை 8:00க்கு புறப்படும் நாகர்கோவில் எக்ஸ்பிரஸ் ரயில்(16322) போத்தனுார், பொள்ளாச்சி, பழநி வழியாக மாற்றி இயக்கப்படுகிறது. இந்த ரயில் வடகோவை, பீளமேடு, சிங்காநல்லுார், திருப்பூர் வழியாக செல்லாது என, சேலம் ரயில்வே தெரிவித்துள்ளது.
