தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/ தனியார் பஸ்கள் இன்று ஓடாது

தனியார் பஸ்கள் இன்று ஓடாது

தனியார் பஸ்கள் இன்று ஓடாது


ADDED : செப் 28, 2026 04:21 PM

Follow on GoogleFavourite on Google

ADDED : செப் 28, 2026 04:21 PM


Follow on Google
அ நிறம் | அளவு

கோவை: டிக்கெட் கட்டணம் உயர்வு உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி 24 மணிநேர வேலை நிறுத்தத்தில் இன்று தனியார் பஸ்கள் ஈடுபடுகின்றன.

மாவட்ட பேருந்து உரிமையாளர் சங்க தலைவர் துரைக்கண்ணன் கூறியதாவது:

2018ல் கடைசியாக டிக்கெட் கட்டணம் உயர்த்தப்பட்டது. அன்று ஒரு லிட்டர் டீசல் ரூ.60; இன்று ரூ.100. ஆனாலும் கட்டணம் உயர்த்தப்படவில்லை.

மகளிருக்கான கட்டணமில்லா வெற்றி பயண திட்டம் உள்ளிட்டவற்றால் ஏற்படும் பாதிப்புகள் குறித்து, அரசின் கவனத்தை ஈர்க்க, வேலை நிறுத்த போராட்டத்தில் ஈடுபட உள்ளோம்.

அதன்படி, இன்று(நேற்று) நள்ளிரவு 12:00 முதல் நாளை(இன்று) நள்ளிரவு 12:00 மணி வரை, மாநிலம் முழுவதும் டவுன், வெளியூர் என, 6,500  தனியார் பஸ்கள் 24 மணி நேரத்திற்கு இயக்கப்படாது. கோவை மாவட்டத்தில் 450 பஸ்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபடுகின்றன.

இவ்வாறு, அவர் கூறினார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us