/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
ராம்நகர் ராமர் கோவிலில் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி
/
ராம்நகர் ராமர் கோவிலில் நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி
ADDED : ஏப் 26, 2025 12:35 AM

கோவை; ஸ்ரீ சத்யசாயி சேவா நிறுவனங்கள் தமிழ்நாடு தெற்கு, கோவை சார்பில், ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் நேற்று மாலை, நாமசங்கீர்த்தன நிகழ்ச்சி நடந்தது.
ராம்நகர் கோதண்டராமர் கோவிலில் உள்ள, அபிநவவித்யாதீர்த்த பிரவச்சன மண்டபத்தில், பரிபாலனா பேஸ் 2வை சேர்ந்த, ஸ்ரீ அபிராமி இசைக்குழுவினரின் ராமநாம கீர்த்தனைகள் பாடப்பட்டன. மிருதங்கம், ஹார்மோனியம், வயலின் ஆகியவை பக்கவாத்தியங்களாக இசைக்கப்பட்டன. திரளானோர் பங்கேற்று, நாமசங்கீர்த்தனத்தில் ஐக்கியமாயினர்.
* ராமர் கோவிலின் வடக்குப்பகுதியிலுள்ள, ஆபத்சஹாயேஸ்வரர் கோவிலில் நேற்று பிரதோஷ வழிபாடுகள் சிறப்பாக நடந்தன. சிவலிங்கத்துக்கு, பிரதோஷகாலத்தில் சகலதிரவிய அபிஷே கம் நடந்தது.
தொடர்ந்து வெள்ளிகவச அலங்காரத்தில், சிவபெருமான் பக்தர்களுக்கு காட்சியருளினார். திரளான பக்தர்கள் சுவாமியை தரிசித்தனர்.

