/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'சக்தி லாக்கர்ஸ்'ன் நஞ்சுண்டாபுரம் கிளை
/
'சக்தி லாக்கர்ஸ்'ன் நஞ்சுண்டாபுரம் கிளை
ADDED : ஆக 30, 2024 10:03 PM
கோவை:'சக்தி லாக்கர்ஸ்'ன் புதுப்பிக்கப்பட்ட மாபெரும் நஞ்சுண்டாபுரம் கிளை, விரிவாக்கத்துடன் துவக்கி வைக்கப்பட்டது.
சக்தி பைனான்ஸ் லிமிடெட் துணை தலைவர் மற்றும் நிர்வாக இயக்குனர் பாலசுப்ரமணியம் துவக்கி வைத்து பேசுகையில், “வாடிக்கையாளர்கள் சேவையை மேம்படுத்தவும், தேவையை நிறைவேற்றவும், இக்கிளை வசதியாக இருக்கும். வாடிக்கையாளர்களுக்கு சிறப்பான சேவையை அளிக்கும் வாய்ப்பை சக்தி லாக்கர்ஸ் பெற்றுள்ளது,'' என்றார்.
புதிய லாக்கர் பிரிவை சக்தி பைனான்ஸ் பைனான்சியல் சர்வீஸ் லிமிடெட் நிறுவனத்தின் செயல் இயக்குனர் ஸ்ருதி பாலசுப்ரமணியம் துவக்கி வைத்து, பேசுகையில், “சென்னை, பெங்களூரு மற்றும் தமிழகத்தில் மாவட்ட தலைநகரங்களில் லாக்கர் விரிவாக்க நடவடிக்கைகளை மேற்கொள்ள திட்டமிட்டுள்ளோம். கோவை ரேஸ்கோர்சில் 'சுவாஸ்யா' என்ற அதிக வசதிகள் கொண்ட பீரிமியம் லாக்கர் சேவையை அறிமுகம் செய்துள்ளோம். தேவையை பொறுத்து இந்த வசதிகளை பிற நகரங்களுக்கும் விரிவாக்கம் செய்ய திட்டமிட்டுள்ளோம்,'' என்றார்.
கம்பெனியின் முழு நேர இயக்குனர் நைனன் வர்கீஸ் கூறுகையில், ''பாதுகாப்புக்கான அதிநவீன தொழில்நுட்ப வசதிகளைக் கொண்டுள்ளது. முதலீடு செய்ய விரும்புவர்களுக்கு, நிறுவன டெபாசிட்கள், மியுச்சுவல் பண்ட் போன்ற சேவைகளையும் அளிக்கிறது,'' என்றார். கூடுதல் தகவல்களுக்கு: 99441 10033.