UPDATED : நவ 06, 2026 07:05 PM
ADDED : நவ 05, 2026 02:14 PM
துடியலூர்: 'நானோ யூரியா மற்றும் மண்வள மேலாண்மையில் அவற்றின் பங்கு' என்ற தலைப்பில் விவசாயிகளுக்கான ஒரு நாள் பயிற்சி முகாம் வெள்ளகிணறில் நடந்தது.
வேளாண்மை துறையின், அட்மா திட்டத்தில், நானோ யூரியா மற்றும் மண்வள மேலாண்மையில் அவற்றின் பங்கு குறித்து விவசாயிகளுக்கான பயிற்சி முகாம் நடந்தது.
இதில்,எஸ்.எஸ். குளம் துணை வேளாண்மை அலுவலர் விஜயகோபால், நிலம் காப்போம் விழிப்புணர்வு நிகழ்வு பற்றியும், நில உடமை சரிபார்த்தல், விவசாய அடையாள எண் பதிவு செய்தல் அவற்றால் விளையும் நன்மை குறித்து விளக்கினார்.
வேளாண் விஞ்ஞானி சுரேஷ், மண்வள அட்டை முடிவுகளின்படி மண்ணுக்கு உரமிடுதல் வாயிலாக மண்வளம் பாதுகாக்கப்படும் என்றார்.
இப்கோ சரவணன், நானோ யூரியா வாங்கி பயன்படுத்துவதன் வாயிலாக செலவினை குறைக்கலாம் என்றார்.
பயிற்சியில், வேளாண் விரிவாக்க அலுவலர்கள் சுகன்யா, நவநீதா, வேளாண் பல்கலை இறுதி ஆண்டு மாணவியர் உள்ளிட்டோர் பங்கேற்றனர். பயிற்சி ஏற்பாடுகளை அட்மா திட்ட அலுவலர்கள் சரண்யா, தங்கமணி செய்திருந்தனர்.
