/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய கூடைப்பந்து; இந்தியன் வங்கி - மின்வாரிய அணி சாம்பியன்
/
தேசிய கூடைப்பந்து; இந்தியன் வங்கி - மின்வாரிய அணி சாம்பியன்
தேசிய கூடைப்பந்து; இந்தியன் வங்கி - மின்வாரிய அணி சாம்பியன்
தேசிய கூடைப்பந்து; இந்தியன் வங்கி - மின்வாரிய அணி சாம்பியன்
ADDED : ஜூன் 02, 2025 11:26 PM

கோவை : தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி ஆண்கள் பிரிவில் இந்தியன் வங்கி அணியும், பெண்கள் பிரிவில் கேரள மாநில மின் வாரிய அணியும், சாம்பியன் பட்டம் வென்றன.
கோவை நேரு ஸ்டேடியம் எதிரே உள்ள, கூடைப்பந்து மைதானத்தில் ஆண்களுக்கான, 58வது நாச்சிமுத்து கவுண்டர் கோப்பை மற்றும், 22வது சி.ஆர்.ஐ. பம்ப்ஸ் மகளிர் கோப்பைக்கான, தேசிய அளவிலான கூடைப்பந்து போட்டி, ஐந்து நாட்கள் நடந்தது.
ஆண்கள், பெண்கள் பிரிவில் தலா எட்டு அணிகள் பங்கேற்றன. பல்வேறு சுற்றுக்களை அடுத்து, பெண்களுக்கான மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில், சென்னை வருமான வரி அணி, 72-57 என்ற புள்ளிகளில் செகந்திராபாத் தென் மத்திய ரயில்வே அணியை வென்றது.
இறுதிப் போட்டியில், கேரள மின் வாரிய அணி, 91-51 என்ற புள்ளிகளில் தென் மேற்கு ரயில்வே அணியை வென்று கோப்பையை தட்டியது.
ஆண்களுக்கான மூன்று மற்றும் நான்காம் இடத்துக்கான போட்டியில், சென்னை வருமான வரி அணியை, 73-56 என்ற புள்ளிகளில், இந்திய கப்பல் படை அணி வென்றது.
இறுதிப் போட்டியில் இந்தியன் வங்கி அணியும் (சென்னை), டெல்லி இந்திய விமானப்படை அணியும் விளையாடின. இதில், இந்தியன் வங்கி அணி, 79-67 என்ற புள்ளிகளில் வென்று, கோப்பையை தட்டிச்சென்றது.
ஆண்கள் பிரிவில் முதல் நான்கு இடங்கள் பிடித்த அணிகளுக்கு, ரூ. 1 லட்சம் மற்றும் நாச்சிமுத்து கவுண்டர் சுழற்கோப்பை, ரூ.50 ஆயிரம் மற்றும் டாக்டர் என்.மகாலிங்கம் கோப்பை, ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம் ஆகியன பரிசாக வழங்கப்பட்டது.
ரூ.75 ஆயிரம் மற்றும் சி.ஆர்.ஐ., பம்ப்ஸ் சுழற்கோப்பை, ரூ.50 ஆயிரம் மற்றும் சுழற்கோப்பை, ரூ.20 ஆயிரம், ரூ.15 ஆயிரம் ஆகியன, முதல் நான்கு இடம் பிடித்த, பெண் வீராங்கனை அணிகளுக்கு பரிசாக வழங்கப்பட்டது.