UPDATED : நவ 07, 2026 12:29 PM
ADDED : நவ 07, 2026 12:26 PM

அ நிறம் | அளவு
கோவை: உப்பிலிபாளையம் பகுதியை சேர்ந்தவர் ஜஸ்வந்த்.
இவர் மசக்காளிபாளையம் மாநகராட்சி நடுநிலைப்பள்ளியில் 6ம் வகுப்பு படிக்கிறார். கராத்தே போட்டியில் ஆர்வம் கொண்ட ஜஸ்வந்த், மாவட்டம் மற்றும் மாநிலளவில் பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளார். பஞ்சாபில் டிசம்பரில் தேசிய கராத்தே போட்டி நடைபெறவுள்ளது. இதையொட்டி ஈரோடு மாவட்டம், சித்தோட்டில் 14 வயதுக்குட்பட்ட பிரிவினருக்கான தேர்வு போட்டியில் ஜஸ்வந்த் பங்கேற்றார். அதில் தேசிய போட்டிக்கு தேர்வாகியுள்ளார். ஜஸ்வந்துக்கு பள்ளி தலைமை ஆசிரியர் சுகுணா, ஆசிரியர்கள், மாணவர்கள் பாராட்டு தெரிவித்தனர்.
