/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேட்டுப்பாளையத்தில் தேசிய கொடி வெற்றி யாத்திரை
/
மேட்டுப்பாளையத்தில் தேசிய கொடி வெற்றி யாத்திரை
ADDED : மே 18, 2025 10:10 PM

மேட்டுப்பாளையம் ; ஜம்மு - காஷ்மீர் மாநிலம் பஹல்காமில் கடந்த மாதம், பயங்கரவாதிகள் நடத்திய தாக்குதலுக்கு பதிலடி கொடுக்கும் வகையில் இந்திய ராணுவம் ஆப்பரேஷன் 'சிந்துார்' என்ற பெயரில், பாகிஸ்தானில் உள்ள பயங்கரவாதிகளின் முகாம்கள் மீது தாக்குதல் நடத்தி வெற்றி பெற்றது. இந்த வெற்றியை கொண்டாடும் விதமாக, நாட்டின் முப்படைகளுக்கும், இந்திய பிரதமர் மோடிக்கும் நன்றி தெரிவிக்கும் வகையில், மேட்டுப்பாளையத்தில் நேற்று பா.ஜ., சார்பில் தேசியக்கொடி வெற்றி யாத்திரை நடந்தது.
மேட்டுப்பாளையம் கோ- ஆப்ரேட்டிவ் காலனியில் இருந்து, இந்த யாத்திரை தொடங்கியது. எம்.எல்.ஏ., செல்வராஜ் துவக்கி வைத்தார். காரமடை சாலை வழியாக அரசு போக்குவரத்துக் கழக டெப்போ வரை சென்றது. யாத்திரையில் ஆண்கள், பெண்கள் கையில் தேசியக்கொடியை பிடித்து வெற்றி கோசமிட்டு சென்றனர். சிறுவர் சிறுமியர், பாரதியார், பாரத மாதா, ராணுவ வீரர் ஆகிய வேடமிட்டு யாத்திரையில் பங்கேற்றனர்.
அரசு போக்குவரத்து கழக பணிமனை அருகே நடந்த கூட்டத்திற்கு, கோவை வடக்கு மாவட்ட பா.ஜ., தலைவர் மாரிமுத்து தலைமை வகித்தார். மேட்டுப்பாளையம் நகர தலைவர் சரவணக்குமார் வரவேற்றார்.
மாநில பொதுச் செயலாளர் முருகானந்தம், மாநில துணைத்தலைவர் கனகசபாபதி, ஆகியோர் பேசினர். மாவட்ட பொது செயலாளர் விக்னேஷ் நன்றி கூறினார்.