/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி; கம்பு சுற்றி அசத்திய கோவை வீரர்கள்
/
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி; கம்பு சுற்றி அசத்திய கோவை வீரர்கள்
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி; கம்பு சுற்றி அசத்திய கோவை வீரர்கள்
தேசிய அளவிலான சிலம்பம் போட்டி; கம்பு சுற்றி அசத்திய கோவை வீரர்கள்
ADDED : நவ 20, 2024 10:43 PM

கோவை ; பெங்களூருவில் நடந்த தேசிய அளவிலான சிலம்பம் போட்டியில் கோவையை சேர்ந்த வீரர், வீராங்கனைகள், 14 பேர் கோப்பைகள் வென்றுள்ளனர்.
கர்நாடக மாநிலம், பெங்களூருவில் உள்ள தனியார் சிலம்பம் அகாடமியில் மூன்றாவது தேசிய அளவிலான அனைத்து பிரிவினருக்கான(ஓபன்) சிலம்பம் போட்டி சமீபத்தில் நடந்தது. இதில், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த வீரர், வீராங்கனைகள், 100க்கும் மேற்பட்டோர் ஆர்வமுடன் பங்கேற்றனர்.
இதில், கோவை, பி.என்., புதுாரில் உள்ள சிலம்பகம் பள்ளியில் பயிற்சி பெறும் மாணவர்களான சஞ்சனா, ரிஸ்வந்த், ரோஹித் ஹரி, இனிஷ், ஸ்ரீ கிரிசிவ், லிங்கா, ரிஷிகேஸ், தீபக், சாய் சரண், பாலகுமரன், அலெக்ஸ், ஹர்ஜித், இளங்கதிர், ரோகித் ஹரி ஆகிய, 14 பேர், 10, 12, 14 வயதுக்குட்பட்டோர் பிரிவில் பங்கேற்று அசத்தினர்.
இதில், ஐந்து மாணவர்கள் முதல் பரிசும், ஐந்து மாணவர்கள் இரண்டாம் பரிசும், நான்கு மாணவர்கள் மூன்றாம் பரிசும் வென்றனர். வெற்றி பெற்ற அனைவருக்கும் கோப்பைகள் வழங்கப்பட்டன. தொடர்ந்து, வெற்றி பெற்றவர்களில் இருந்து சிறந்த வீரர், வீராங்கனைகள் சர்வதேச அளவிலான போட்டிக்கு தேர்வு செய்யப்பட உள்ளனர். வெற்றி பெற்றவர்களுக்கு சிலம்பம் ஆசிரியர் பிரதாப் பாராட்டுக்கள் தெரிவித்தார்.