UPDATED : நவ 20, 2026 07:54 PM
ADDED : நவ 20, 2026 07:54 PM
அ நிறம் | அளவு
சூலூர்: செலக்கரச்சல் கிளை நூலகத்தில், 59 வது தேசிய நூலக வார விழா, வாசகர் வட்ட தலைவர் சாமிநாதன் தலைமையில் நடந்தது.
மாவட்ட நூலக அலுவலர் நந்தகுமார், நூலக வாரவிழா கொண்டாடப்படுவதன் நோக்கம் குறித்து விளக்கினார். பேச்சு மற்றும் ஓவிய போட்டியில் வென்ற மாணவ, மாணவிகளுக்கு, சான்றிதழ், பரிசு வழங்கப்பட்டன.
25 மாணவ, மாணவியர் நூலகத்தில் உறுப்பினராக சேர்ந்தனர். இரு புரவலர்கள் சேர்ந்தனர். வருவாய் ஆய்வாளர் ராஜ், கிராம நிர்வாக அலுவலர்கள் குமார், சுரேஷ்குமார், நூலகர்கள் செந்தில்குமார், சுகந்தபிரியா, ராஜேஸ்வரி மற்றும் மாணவர்கள், ஆசிரியர்கள் பங்கேற்றனர்.
