/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தேசிய 'தாங் டா' போட்டி; கோவை மாணவியர் பதக்கம்
/
தேசிய 'தாங் டா' போட்டி; கோவை மாணவியர் பதக்கம்
ADDED : ஜன 25, 2024 06:38 AM
கோவை : டில்லியில் நடந்த தேசிய அளவிலான 'தாங் டா' போட்டியில், கோவை மாணவியர் மூன்று பதக்கங்கள் வென்றனர்.
இந்திய பள்ளிகளின் விளையாட்டு குழுமம் (எஸ்.ஜி.எப்.ஏ.,) சார்பில் பள்ளி மாணவ - மாணவியருக்கான, 67வது தேசிய அளவிலான விளையாட்டு போட்டிகள், பல்வேறு பகுதிகளில் நடந்தன. இதன், 'தாங் டா' போட்டி, டில்லியில் உள்ள தியாகராஜ ஸ்போர்ட்ஸ் காம்ப்ளக்சில் நடந்தது.
இப்போட்டியில், நாட்டின் பல்வேறு மாநிலங்களை சேர்ந்த மாணவ - மாணவியர் பங்கேற்றனர். தமிழ்நாடு சார்பில் பங்கேற்ற, கோவை கிருஷ்ணம்மாள் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த மேரி பிரியதர்சினி, 19 வயதுக்கு உட்பட்டோர் பிரிவில் தங்கப்பதக்கமும், 17வயதுக்கு உட்பட்டோருக்கான பிரிவில் கோபால் நாயுடு மேல்நிலைப்பள்ளி மாணவி சிவானி வெண்கலப்பத்தக்கமும், 14 வயது பிரிவில், வி.சி.வி., சிசு வித்யோதயா பள்ளி மாணவி நேத்ராஸ்ரீ வெண்கலமும் வென்றனர்.