/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எரியாத மின்விளக்குகளை மாற்றுவதில் அலட்சியம்
/
எரியாத மின்விளக்குகளை மாற்றுவதில் அலட்சியம்
ADDED : அக் 23, 2024 10:18 PM
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, கோட்டூர் ரோடு ரயில்வே மேம்பாலம் சுற்றுப்பகுதி கிராமங்களை இணைக்கும் முக்கிய வழித்தடமாக உள்ளது. குறிப்பாக, வால்பாறை, ஆழியாறு உள்ளிட்ட சுற்றுலா தலங்களுக்கு செல்லும் முக்கிய பாதையாகும்.
இதனால், இவ்வழித்தடத்தில் எப்போதும் வாகன போக்குவரத்து அதிகளவில் காணப்படும். ரயில்வே மேம்பாலத்தில், இருபுறமும் கம்பங்கள் அமைத்து, மின்விளக்குகள் அமைக்கப்பட்டுள்ளன. ஆனால், பல மின்விளக்குகள் பழுதடைந்து எரியாததால், இரவு நேரத்தில் இருள் சூழ்ந்து காணப்படுகிறது. இந்த நிலை பல மாதங்கள் கடந்தும் நீடிக்கிறது. எரியாத மின்விளக்குகளை மாற்றியமைக்க அதிகாரிகள் நடவடிக்கை எடுப்பதில்லை.
வாகன ஓட்டுநர்கள் கூறுகையில், 'ரயில்வே மேம்பாலத்தில், இரவு நேரத்தில், இருள் சூழ்ந்தே காணப்படுகிறது. பழுதான மின்விளக்குகளை சரி செய்ய அலுவலர்கள் கவனம் செலுத்துதில்லை. இரவில், விபத்து அபாயம் உள்ளது,' என்றனர்.