/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் கொண்டாட்டம்
/
நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் கொண்டாட்டம்
ADDED : ஜன 24, 2025 09:56 PM

பொள்ளாச்சி; பொள்ளாச்சியில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் பிறந்த நாள் விழா கொண்டாடப்பட்டது.
பொள்ளாச்சி நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் இளைஞர் பேரவை சார்பில், நேதாஜி சுபாஷ் சந்திரபோஸின், 128வது பிறந்த நாள் விழாவையொட்டி, மரக்கன்று மற்றும் அன்னதானம், நலத்திட்ட உதவிகள் வழங்கும் விழா, புது பஸ் ஸ்டாண்ட் அருகே நடந்தது.
சப் - கலெக்டர் கேத்ரின் சரண்யா, நேதாஜியின் உருவப்படத்துக்கு மலர் துாவி மரியாதை செலுத்தி விழாவை துவக்கி வைத்தார். பேரவை தலைவர் நடராஜ் தலைமை வகித்தார். செயலாளர் மணிகண்டன் வரவேற்றார்.
என்.ஜி.எம்., கல்லுாரி முன்னாள் முதல்வர் முத்துக்குமரன், கல்லுாரி முதல்வர் மாணிக்கசெழியன் ஆகியோர், நேதாஜி குறித்து பேசினர். ம.தி.மு.க., மாவட்ட செயலாளர் செந்தில், பொள்ளாச்சி கம்பன் கலை மன்ற தலைவர் சண்முகம், கவிஞர் முருகானந்தம், முதலுதவி சமூக நல அறக்கட்டளை நிர்வாகி இக்பால், கவுன்சிலர் சாந்தலிங்கம் மற்றும் அ.தி.மு.க., - தி.மு.க., நிர்வாகிகள், பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பங்கேற்று பேசினர்.
என்.ஜி.எம்., கல்லுாரி வரலாற்று துறை மாணவர்கள், பொதுமக்கள், ஆட்டோ ஓட்டுநர்கள், சமூக நல அலுவலர்கள் பங்கேற்றனர். மா, பலா, கொய்யா, வேம்பு, நெல்லி, மகிழம்பூ உள்ளிட்ட மரக்கன்றுகளை பொதுமக்களுக்கு வழங்கினர்.

