/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சசி கிரியேட்டிவ் கல்லுாரியில் புதிய படிப்பு துவக்கம்
/
சசி கிரியேட்டிவ் கல்லுாரியில் புதிய படிப்பு துவக்கம்
சசி கிரியேட்டிவ் கல்லுாரியில் புதிய படிப்பு துவக்கம்
சசி கிரியேட்டிவ் கல்லுாரியில் புதிய படிப்பு துவக்கம்
ADDED : ஜூலை 15, 2025 09:02 PM
கோவை; ஏ.ஐ.சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற பி.டெஸ்(இன்டீரியர் டிசைன்) பட்டப்படிப்பை சசி கிரியேட்டிவ் துவங்குகிறது.
கோவை சசி கிரியேட்டிவ் கல்லுாரி, அண்ணா பல் கலையுடன் இணைந்து, ஏ.ஐ. சி.டி.இ., அங்கீகாரம் பெற்ற பி.டெஸ் (இன்டீரியர் டிசைன்) பட்டப்படிப்பை வழங்குகிறது. இப்புதிய பாடத்திட்டம் கட்டடக்கலை நிறுவனமான டில்லி சி.பி.குக்ரேஜா ஆர்க்கிடெக்ட்ஸ் நிறுவனத்தின் ஒத்துழைப்புடன் உருவாக்கப்பட்டுள்ளது.
கல்லுாரி நிர்வாக அறங்காவலர் ராஜதீபன் சுவாமிநாதன் கூறுகையில்,''இந்தியாவின் இன்டீரியர் டிசைன் சந்தை, 2023 ல், 32.1 பில்லியன் அமெரிக்க டாலரில் இருந்து, 2030ம் ஆண்டுக்குள், 81.2 பில்லியன் அமெரிக்க டாலராக வளரும் வாய்ப்புள்ளது. இந்த வளர்ச்சியடைந்த சந்தைக்கு தகுந்த மாணவர்களை உருவாக்குகிறோம்,'' என்றார். முதல் குழுவுக்கான சேர்க்கை தற்போது நடக்கிறது. விபரங்களுக்கு, www.scid.ac.in என்ற இணையதளத்தை பார்க்கலாம்.