/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோரிக்கைக்கு பலன் புதிய ரேஷன் கடை திறப்பு பள்ளியில் முப்பெரும் விழா
/
கோரிக்கைக்கு பலன் புதிய ரேஷன் கடை திறப்பு பள்ளியில் முப்பெரும் விழா
கோரிக்கைக்கு பலன் புதிய ரேஷன் கடை திறப்பு பள்ளியில் முப்பெரும் விழா
கோரிக்கைக்கு பலன் புதிய ரேஷன் கடை திறப்பு பள்ளியில் முப்பெரும் விழா
ADDED : பிப் 20, 2024 04:50 AM

அன்னுார்: நாகமாபுதுாரில், ரூ.15 லட்சம் மதிப்பில், ரேஷன் கடைக்கு புதிய கட்டடம் கட்டப்பட்டு திறப்பு விழா நடந்தது.
அன்னுார் கூட்டுறவு பண்டகசாலையின் ரேஷன் கடை, நாகமபுதுாரில், 20 ஆண்டுகளாக வாடகை கட்டடத்தில் செயல்பட்டு வந்தது. 1,380 குடும்பங்கள், இங்கு ரேஷன் பொருட்கள் வாங்கி வருகின்றன. மழை காலங்களில் ஒழுகுவதாலும், வாடகை செலவீனத்தாலும் கூட்டுறவு பண்டக சாலை சிரமத்துக்கு உள்ளாகி வந்தது.
சொந்த கட்டடம் வேண்டும் என, பல ஆண்டுகளாக மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனர். இதையடுத்து, த.மா.கா., தலைவரும், ராஜ்யசபா எம்.பி.,யுமான வாசன், தொகுதி மேம்பாட்டு நிதியிலிருந்து, 13 லட்சத்து 80 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கினார். பேரூராட்சியில் இருந்து ஒரு லட்சத்து 20 ரூபாய் நிதி ஒதுக்கப்பட்டது, இதையடுத்து, 15 லட்சம் மதிப்பில் கட்டப்பட்ட புதிய ரேஷன் கடை திறப்பு விழா நடந்தது.
வார்டு கவுன்சிலர் கார்த்திகேயன் திறந்து வைத்தார். பேரூராட்சி தலைவர் பரமேஸ்வரன் தலைமை வகித்தார். துணைத் தலைவர் விஜயகுமார் முன்னிலை வகித்தார். கவுன்சிலர்கள், பேரூராட்சி அலுவலர்கள், பொதுமக்கள் பங்கேற்றனர்.
மேட்டுப்பாளையம், பிப். 20--
காரமடை அருகே சுண்டக்கரைப்புதுார் ஊராட்சி ஒன்றிய தொடக்கப் பள்ளியில், எல்.எம்.டபிள்யூ., ஜி.கே.டி., டிரஸ்ட்டுக்கு பாராட்டு விழா, ஆண்டு விழா, விளையாட்டு விழா என முன்பெரும் விழா நடந்தது.
சிறப்பு விருந்தினராக, மேட்டுப்பாளையம் எம்.எல்.ஏ., செல்வராஜ் கலந்து கொண்டார். பள்ளி முதல்வர் ருக்பா செல்வி பேசுகையில், ''எல்.எம்.டபிள்யூ., -ஜி.கே.டி டிரஸ்ட் சார்பாக பள்ளி ரூ.11.75 லட்சத்தில் புனரமைப்பு செய்யப்பட்டுள்ளது.
இதற்கு காரணமான அனைவருக்கும் நன்றி. பள்ளியின் தேவைக்காக குடிநீர் தொட்டி அமைத்து கொடுத்த எம்.எல்.ஏ.,வுக்கு நன்றி,'' என்றார். எல்.எம்.டபிள்யூ.,- ஜி.கே.டி., டிரஸ்ட் சி.எஸ்.ஆர்., ஒருங்கிணைப்பாளர் கணேஷ்குமார், வட்டார கல்வி அலுவலர் ராஜேந்திரன், வெள்ளியங்காடு ஊராட்சி தலைவர் ஜெயமணி, பி.டி.ஏ., துணை தலைவர் செல்வப்பிள்ளை உட்பட பலர் பங்கேற்றனர்.---

