/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனத்தில் புது மாணவர்களுக்கு வரவேற்பு
/
எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனத்தில் புது மாணவர்களுக்கு வரவேற்பு
எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனத்தில் புது மாணவர்களுக்கு வரவேற்பு
எஸ்.என்.எஸ்., கல்வி நிறுவனத்தில் புது மாணவர்களுக்கு வரவேற்பு
ADDED : செப் 19, 2024 11:01 PM

கோவை : எஸ்.என்.எஸ்., கல்விநிறுவனங்களின் முதலாமாண்டு இளங்கலை, முதுகலை மாணவர்களுக்கான துவக்கவிழா மற்றும் சிறந்த முதுகலை மாணவர்களுக்கான விருது வழங்கும் விழா கல்லுாரி அரங்கில் நடந்தது.
மும்பையில் உள்ள, சி.பைவ்.ஐ., நிறுவன சீனியர் மேலாளர் ஹேமல் தாக்கர் பங்கேற்று பேசினார். வேகமாக வளர்ந்து வரும் சமூகத்தில், ஏ.ஐ., தொழில்நுட்பம் மற்றும் ஜெனரேடிவ் ஏ.ஐ., பிரிவில் கவனம் செலுத்தவேண்டும் என அறிவுறுத்தினார்.
இந்நிகழ்வில், புதிதாக சேர்ந்துள்ள மாணவர்கள், பெற்றோர் பங்கேற்றனர். மேலும் கடந்த ஆண்டில் பல்வேறு பிரிவுகளில் சிறப்பாக செயல்பட்ட மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கி கவுரவிக்கப்பட்டது.
எஸ்.என்.எஸ்., குழுமங்களின் தலைவர் சுப்ரமணியன், தாளாளர் ராஜலட்சுமி, தொழில்நுட்ப இயக்குனர் நளின் விமல், சி.இ.ஓ., டேனியல், இயக்குனர் அருணாசலம் உள்ளிட்ட பலர் பங்கேற்றனர்.