/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
பயன்பாட்டுக்கு வந்த புதுக்கழிப்பிடம்
/
பயன்பாட்டுக்கு வந்த புதுக்கழிப்பிடம்
ADDED : நவ 25, 2024 10:36 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, கல்லாபுரத்தில் புதிய பொதுக்கழிப்பிடம் மக்கள் பயன்பாட்டிற்கு திறக்கப்பட்டது.
கிணத்துக்கடவு ஒன்றியம், குதிரையாலம்பாளையம் ஊராட்சி, கல்லாபுரம் கிராமத்தில் மக்கள் பலர் பொதுக்கழிப்பிடம் இன்றி சிரமப்பட்டு வந்தனர். இதைத்தொடர்ந்து அப்பகுதியில், புது கழிப்பிடம் கட்ட முடிவு செய்யப்பட்டு, கிணத்துக்கடவு தொகுதி எம்.எல்.ஏ., நிதியிலிருந்து, 7 லட்சம் ரூபாய் மதிப்பீட்டில் புதிதாக கழிப்பிடம் கட்டப்பட்டது.
கட்டி முடிக்கப்பட்ட பொதுக்கழிப்பிடத்தை, எம்.எல்.ஏ., தாமோதரன் நேற்று மக்கள் பயன்பாட்டுக்கு அர்ப்பணித்தார். நிகழ்ச்சியில், குதிரையாலம்பாளையம் ஊராட்சி தலைவர் தர்மராஜ், ஊராட்சி பணியாளர்கள் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.

