சீரான மின் வினியோகத்துக்கு புதிதாக டிரான்ஸ்பார்மர்
சீரான மின் வினியோகத்துக்கு புதிதாக டிரான்ஸ்பார்மர்
UPDATED : நவ 10, 2026 09:50 AM
ADDED : நவ 10, 2026 09:46 AM
அ நிறம் | அளவு
பொள்ளாச்சி: பொள்ளாச்சி, தளவாய்பாளையத்தில் சீரான மின்வினியோகத்திற்கு புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டுள்ளது.
பொள்ளாச்சி சமத்தூர் மின் அலுவலகத்திற்கு உட்பட்ட தளவாய்பாளையம் பகுதியில், கடந்த சில நாட்களாக மின்னழுத்த பிரச்னை இருந்தது. இதனால் அப்பகுதியில் லைட், டி.வி., உள்ளிட்ட எலக்ட்ரிக் சாதனங்கள் பழுதடைந்தது.
இதைத்தொடர்ந்து, சீரான மின்வினியோகம் வேண்டுமென, அப்பகுதி மக்கள் வலியுறுத்தி வந்தனர். இதையடுத்து, மின்வாரியம் சார்பில் சீரான மின்சாரம் வழங்க, புதிதாக டிரான்ஸ்பார்மர் அமைக்கப்பட்டது. இந்நிகழ்ச்சியில், மின்வாரியத்தினர் மற்றும் பொதுமக்கள் பங்கேற்றனர்.
