/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
புதிய ரக கரும்பு ஆராய்ச்சி; வேளாண் பல்கலை ஒப்பந்தம்
/
புதிய ரக கரும்பு ஆராய்ச்சி; வேளாண் பல்கலை ஒப்பந்தம்
புதிய ரக கரும்பு ஆராய்ச்சி; வேளாண் பல்கலை ஒப்பந்தம்
புதிய ரக கரும்பு ஆராய்ச்சி; வேளாண் பல்கலை ஒப்பந்தம்
ADDED : ஜூன் 26, 2025 11:29 PM
கோவை; கோவை வேளாண் பல்கலை மற்றும் இ.ஐ.டி., பாரி நிறுவனம் இடையே புரிந்துணர்வு ஒப்பந்தம் கையொப்பமானது.
கரும்பு சாகுபடி, சர்க்கரை மீட்பு தொழில்நுட்பங்கள், புதிய கரும்பு வகைகளின் வளர்ச்சிக்கான ஆராய்ச்சி, நிலையான சாகுபடி முறைகள் நோய் எதிர்ப்பு சக்தி மற்றும் திசு வளர்ப்பு கரும்பு, கரும்பு மகசூல், மரபணு மேம்பாடு, சுற்றுச்சூழல் பாதிப்பைக் குறைத்து உற்பத்தித் திறனை அதிகரித்தல் ஆகியவை சார்ந்து இந்த புரிந்துணர்வு ஒப்பந்தம் மேற்கொள்ளப்பட்டது.
இ.ஐ.டி., பாரி நிறுவன தலைமைச் செயல் அதிகாரி அப்துல் ஹக்கீம் ஆஷிக், வேளாண்பல்கலை தாவர மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிரி தொழில்நுட்ப மைய இயக்குநர் செந்தில், தாவர உயிரி தொழில்நுட்ப துறை தலைவர் கோகிலாதேவி உள்ளிட்டோர் பங்கேற்றனர்.