/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
சோமனூர் ரயில் நிலையத்தில் தொடரும் சோகம்: பிளாட்பாரம் இல்லாததால் புதரில் இறங்கும் அவலம்
/
சோமனூர் ரயில் நிலையத்தில் தொடரும் சோகம்: பிளாட்பாரம் இல்லாததால் புதரில் இறங்கும் அவலம்
சோமனூர் ரயில் நிலையத்தில் தொடரும் சோகம்: பிளாட்பாரம் இல்லாததால் புதரில் இறங்கும் அவலம்
சோமனூர் ரயில் நிலையத்தில் தொடரும் சோகம்: பிளாட்பாரம் இல்லாததால் புதரில் இறங்கும் அவலம்
ADDED : நவ 29, 2018 11:51 PM

கருமத்தம்பட்டி:சோமனுார் ரயில் நிலையத்தில் ஒன்றுக்கு மூன்று அகல ரயில்பாதைகள் உள்ளன. ஆனால், பயணிகள் ஏறவோ, இறங்கவோ பிளாட்பாரம் வசதியின்றி, புதரில் இறங்கி, தண்டவாளத்தில் நடந்து செல்லும் அபாயம் தொடர்கிறது.சோமனுாரில் நுாற் றாண்டு கடந்த ரயில் நிலையம் உள்ளது. இந்த ரயில் நிலையம் கோவை - சேலம் முக்கிய வழித்தடத்தில் இருப்பதால், மூன்று அகல ரயில்பாதைகள் கடக்கின்றன.
தினமும் 44க்கும் மேற்பட்ட எக்ஸ்பிரஸ் ரயில்கள், இரு பாசஞ்சர் ரயில்கள் மற்றும் சரக்கு ரயில்கள் கடந்து செல்கின்றன. எக்ஸ்பிரஸ் ரயில்களில், 20க்கும் மேற்பட்டவை சோமனுாரில் நின்று செல்கின்றன.குறிப்பாக, கன்னியாகுமரி - கோவை எக்ஸ்பிரஸ் ரயில் போன்ற பல இரயில்கள் நள்ளிரவு நேரங்களில் நின்று பயணிகளை இறக்கி விடும். இவை பெரும்பாலும், ரயில் நிலையத்தின் எதிரில் உள்ள மூன்றாவது டிராக்கில் தான் வரும். அந்தப் பகுதியில் மிகவும் குறுகிய அளவிலான பிளாட்பார்ம் வசதியே உள்ளது. ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள வடக்குப்பகுதியில் தான் சுமார் 300 மீ., நீளத்தில் பிளாட்பார்ம் வசதி உள்ளது.எதிரில், பிளாட்பார்ம் வசதி குறுகிய நீளத்துடன் இருப்பதால், பல எக்ஸ்பிரஸ் ரயில்களின் பெட்டிகள் நிற்கும் இடம் புதராகத்தான் இருக்கிறது. இதில் வரும் பயணிகள் குறிப்பாக பெண்கள், நள்ளிரவு நேரங்களில் இந்த புதர்களுக்குள் இறங்கி, பின்னர் சாலைக்கு வருவதற்காக மூன்று தண்டவாளங்களையும் தாண்டி வரவேண்டியுள்ளது.முதியவர்கள், பெண்கள், குழந்தைகளை அழைத்து வருவோர் இதனால் பெரிதும் சிரமங்களை சந்திக்கின்றனர்.
மேலும், தண்டவாளத்தை தாண்டும் நேரத்தில், அடுத்த தண்டவாளங்களின் வழியே ரயில்கள் வரும் அபாயத்தையும் அடிக்கடி சந்திக்க வேண்டியுள்ளது. மேலும், நீளம் குறைவாக உள்ள பிளாட்பாரத்தில் போதிய விளக்கு வசதிகளும் இல்லை.எனவே, ரயில்நிலையத்தின் எதிரில் உள்ள 3வது ரயில் தண்டவாளத்தின் அருகில் உள்ள பிளாட்பாரத்தை விரிவாக்க வேண்டும். போதிய விளக்கு வசதி செய்யவேண்டும் என, சோமனுார் ரயில் பயணிகள் வலியுறுத்தி வருகின்றனர்.தென்னக ரயில்வே அதிகாரிகள் இந்த அபாயத்தை கணக்கில் கொண்டால், விபத்து அபாயத்தை தவிர்க்கலாம்.