/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
என்.ஜி.என்.ஜி., பள்ளியில் உலகநீதி நுால் மறுவெளியீடு
/
என்.ஜி.என்.ஜி., பள்ளியில் உலகநீதி நுால் மறுவெளியீடு
என்.ஜி.என்.ஜி., பள்ளியில் உலகநீதி நுால் மறுவெளியீடு
என்.ஜி.என்.ஜி., பள்ளியில் உலகநீதி நுால் மறுவெளியீடு
ADDED : நவ 06, 2024 09:10 PM

ஆனைமலை; ஆனைமலை அருகே, என்.ஜி.என்.ஜி., பள்ளியில், உலகநீதி நுால் மறுவெளியீடு செய்யப்பட்டது.
ஆனைமலை அருகே, ரெட்டியாரூர் என்.ஜி.என்.ஜி., மேல்நிலைப்பள்ளியில், உலகநாதரால் இயற்றப்பட்ட உலகநீதி என்னும் நுால் மறுவெளியீடு செய்யப்பட்டது. இந்த நுாலை பள்ளித் தலைமையாசிரியர் கிட்டுச்சாமி, மாணவர்களுக்கு வழங்கினார்.
பண்டைய தமிழ் அற நுாலான இந்த நுாலுக்கு, தமிழாசிரியர் செந்தில்குமார் பொருள் விளக்கம் அளித்து, மாணவர்களுக்கு எளிமையான முறையில் புரியும் வண்ணம் சீர் பிரித்து அருஞ்சொல் பொருள் விளக்கம் அளித்துள்ளார்.
இந்நுால் பற்றி அவர் கூறியதாவது:
பள்ளியில் தமிழ் இலக்கிய மன்றத்தின் சார்பாக ஆண்டு தோறும் மாணவர்களின் படைப்புகள் புத்தகமாக வெளியிடப்படுகிறது. அதன் தொடர்ச்சியாக, உலக நீதி நுால் பதிப்பு செய்யப்பட்டு மறுவெளியீடு செய்யப்பட்டுள்ளது.
இன்றைய சூழலில் மாணவர்களுக்குத் தேவையான அறக்கருத்துகள் நிறைந்ததும், எளிமையான பாடல்கள் நிறைந்ததுமான இந்நுாலை வெளியிடுவதன் வாயிலாக மாணவர்களின் ஆளுமைத் திறனும், நல்லொழுக்கமும் மேம்படும்.
மொத்தம், 13 பாடல்கள் உள்ள இந்நுாலில் உள்ள ஒவ்வொரு வரியிலும், எதையெல்லாம் செய்யக்கூடாது; எவற்றையெல்லாம் தவிர்க்க வேண்டும் என்று விளக்கி கூறுவதாக உள்ளது. மாணவர்கள் மட்டுமல்லாது அனைவரும் படிக்க வேண்டிய அறநுாலாகும். இது தமிழ் இலக்கிய மன்றத்தின் மூன்றாவது படைப்பாகும்.
இவ்வாறு, கூறினார்.