/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
தாபா ஹோட்டல்களில் ரெய்டு; ஒன்பது பேர் கைது
/
தாபா ஹோட்டல்களில் ரெய்டு; ஒன்பது பேர் கைது
ADDED : ஜன 08, 2024 10:52 PM
அன்னுார்:அன்னுாரில் தாபா ஹோட்டலில் நடத்திய சோதனையில், 385 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. 9 பேர் கைது செய்யப்பட்டனர்.
அன்னுார் வட்டாரத்தில், தாபா ஹோட்டல்களில், சட்டவிரோதமாக மது விற்கப்படுவதாகவும், மது அருந்து அனுமதிப்பதாகவும் மாவட்ட ரூரல் போலீஸ் அலுவலகத்திற்கு புகார் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து சிறப்பு பிரிவு போலீசார் அன்னுாரில் அவிநாசி ரோடு, கோவை ரோடு, கஞ்சப்பள்ளி பிரிவு, கணேசபுரம் உள்ளிட்ட பகுதியிலுள்ள ஒன்பது தாபா ஹோட்டல்களில், நேற்று மாலை அதிரடி ரெய்டு நடத்தினர். இதில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் ரூபாய் மதிப்புள்ள 385 மது பாட்டில்கள் பறிமுதல் செய்யப்பட்டன. சட்டவிரோதமாக மது விற்பனைக்கு வைத்திருந்ததாகவும், மது அருந்த அனுமதித்ததாகவும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. ஒன்பது பேர் கைது செய்யப்பட்டனர்.