/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
கோர்ட் அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை இல்லை; அதிகாரிகள் அலட்சியம்
/
கோர்ட் அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை இல்லை; அதிகாரிகள் அலட்சியம்
கோர்ட் அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை இல்லை; அதிகாரிகள் அலட்சியம்
கோர்ட் அவமதிப்பு வழக்கில் நடவடிக்கை இல்லை; அதிகாரிகள் அலட்சியம்
ADDED : ஜன 02, 2025 10:31 PM
சூலுார்; சூலுார் ஒன்றியத்துக்கு உட்பட்டது கரவழி மாதப்பூர் ஊராட்சி. தலைவராக உள்ள செல்வராஜ், முறைகேடாக, தொழிற்சாலைக்கு அனுமதி அளித்ததாக புகார் எழுந்தது.
அது குறித்து ஊரக வளர்ச்சி துறை அதிகாரிகள் விசாரணையில் குற்றச்சாட்டு உண்மை என்பது நிரூபணமானது. ஊராட்சி தலைவரை பதவி நீக்கம் செய்து ஊராட்சிகளின் உதவி இயக்குனர்( தணிக்கை) கலெக்டருக்கு பரிந்துரை செய்தார். ஓராண்டு கடந்தும் எந்த நடவடிக்கையும் இல்லை. இதனால் அதிருப்தி அடைந்த, அந்த ஊரை சேர்ந்த சமூக ஆர்வலர் சரவணன் கோர்ட்டில் வழக்கு தொடர்ந்தார். ஒரு மாதத்தில் நடவடிக்கை எடுப்பதாக மாவட்ட நிர்வாகம் கோர்ட்டில் உறுதி அளித்தது. ஆனாலும் நடவடிக்கை இல்லை.
இதையடுத்து, நீதிமன்ற அவமதிப்பு வழக்கு தொடரப்பட்டது. அப்போது ஆஜரான மாவட்ட நிர்வாகத்தின் வக்கீல், ஊராட்சி தலைவரிடம் தன்னிலை விளக்கம் பெறப்பட்டுள்ளது. அதனை படித்து பார்த்து உடனடியாக நடவடிக்கை எடுத்து, கோர்ட்டில் தாக்கல் செய்வதாக உறுதி அளித்தார். ஆனால், இதுவரை நடவடிக்கை இல்லை.
இதுகுறித்து சரவணன் கூறுகையில், நீதிமன்ற அவமதிப்பு வழக்கில் உறுதி அளித்தும் எந்த நடவடிக்கையும் அதிகாரிகள் எடுக்கவில்லை. பதவிக்காலம் இரு நாட்கள் மட்டுமே உள்ளது. அதற்குள் நடவடிக்கை எடுக்காவிடில், மீண்டும் கோர்ட்டில் முறையிட்டு அதிகாரிகள் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்த உள்ளேன், என்றார்.

