/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
அமெரிக்க வரி விதிப்பால் பாதிப்பு இல்லை; மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு தகவல்
/
அமெரிக்க வரி விதிப்பால் பாதிப்பு இல்லை; மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு தகவல்
அமெரிக்க வரி விதிப்பால் பாதிப்பு இல்லை; மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு தகவல்
அமெரிக்க வரி விதிப்பால் பாதிப்பு இல்லை; மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பு தகவல்
ADDED : ஆக 06, 2025 10:01 PM
அன்னுார்; அமெரிக்க வரிவிதிப்பால், பாதிப்பு இல்லை என்றும், வேறு நாடுகளில் வணிக வாய்ப்பு பெற்றுத் தர வேண்டும்,' என, மறு சுழற்சி ஜவுளி கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.
நாடு முழுவதிலும் உள்ள 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட ஸ்பின்னிங் மில்களில் இருந்து வெளியாகும் கழிவுப்பஞ்சு, பின்னலாடை நிறுவனங்களின் கழிவுத்துணிகள், பெட் பாட்டில்கள், விசைத்தறி கழிவு துணிகள், ஏர் ஜெட் லூம் நிறுவனங்களின் கழிவு துணிகள் ஆகியவற்றை பயன்படுத்தி ஓ.இ., மில்கள் 2ம் எண் முதல், 40ம் எண் வரையிலான, 54 விதமான வண்ண நூல்களை உற்பத்தி செய்கின்றன. இந்த நூல்களை பயன்படுத்தி, உற்பத்தி செய்யும் காடா துணிகள், பின்னலா டைகள் உள்ளிட்டவை அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுக்கு ஏற்றுமதி செய்யப்படுகிறது. இந்நிலையில் இந்தியாவில் இருந்து அமெரிக்காவுக்கு அனுப்பப்படும் பொருட்களுக்கு 25 சதவீத வரி விதிக்கப்பட்டுள்ளது. இதனால் ஓ.இ., மில்களில் பாதிப்பு ஏற்படும் என்னும் அச்சம் எழுந்துள்ளது.
இதுகுறித்து மறுசுழற்சி ஜவுளி கூட்டமைப்பின் மாநில தலைவர் ஜெயபால் கூறுகையில், கோவை மாவட்டத்தில் 54, மற்றும் தமிழகத்தில் 600 ஓ.இ.மில்கள் உள்ளன. நம் நாட்டின் மொத்த உற்பத்தியில் மூன்று சதவீதம் மட்டுமே ஏற்றுமதி ஆகிறது. அமெரிக்காவுக்கு ஜவுளி ஏற்றுமதியில் பாதிப்பு ஏற்பட்டால் மத்திய அரசு அதற்காக இந்திய இறையாண்மையை விட்டுக் கொடுக்க தேவையில்லை. அதற்கு பதில் அமெரிக்கா அல்லாத ஐரோப்பியா உள்ளிட்ட பிற நாடுகளில் ஜவுளி ஏற்றுமதி செய்ய வாய்ப்புகளை மத்திய அரசு பெற்றுத் தர வேண்டும்.
ஜவுளி ஏற்றுமதி உற்பத்தியாளர்களுக்கு ஏற்றுமதி ஊக்குவிப்பு சலுகைகள் அறிவிக்க வேண்டும். இதன் மூலம் அமெரிக்காவின் அதிக வரி விதிப்பில் இருந்து இந்திய ஜவுளி உற்பத்தியாளர்கள் பாதுகாக்கப்படுவார்கள், என்றார்.