/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
'போன் பண்ணினால் எடுப்பது இல்லை'; வங்கிகள் குறித்து நிதி அமைச்சரிடம் புகார்

ADDED : செப் 01, 2025 10:45 PM
கோவை; மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனுக்கு, 'கோவை சிட்டிசன்ஸ் வாய்ஸ்' என்ற நுகர்வோர் அமைப்பு தலைவர் ஜெயராமன் மற்றும் நிர்வாகிகள் அனுப்பிய மனு:
சில தேசிய மயமாக்கப்பட்ட மற்றும் தனியார் வங்கிகள் தங்களது லேண்ட்லைன் தொலைபேசி அழைப்புகளுக்கு பதிலளிப்பது இல்லை. வாடிக்கையாளர்கள், கிளை அதிகாரிகளை அவசர சூழ்நிலைகளில் தொடர்பு கொள்ள இயலாமல் போகிறது.
சில கிளைகளில் லேண்ட்லைன் போன் இணைப்பு வசதி இல்லை. வங்கிகளின் இணைய தளம் அல்லது அதிகாரப்பூர்வ பதிவு மொபைல் எண்கள் செயல்படாதவையாக இருக்கின்றன.
அனைத்து வங்கிகளுக்கும், தொடர்பு எண்களை புதுப்பித்து, அவை சரியான நிலையில் செயல்படுகிறதா என்பதை சரிபார்க்க, கடுமையான உத்தரவு வழங்க வேண்டும்.
வங்கி கணக்கு ரகசிய எண்கள், ஓ.டி.பி., எண்கள், தொலைபேசியில் பகிர வேண்டாம் என்று சைபர் கிரைம் போலீசார் தொடர்ந்து எச்சரிக்கின்றனர்.
வாடிக்கையாளர்கள் தங்களது வங்கியை தொடர்பு கொண்டு புகார் அளிக்க முடியாததால், மோசடி பேர்வழிகளிடம் சிக்கும் சூழ்நிலை ஏற்படுகிறது. நிதி அமைச்சகம் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்.
இவ்வாறு, அவர்கள் கூறியுள்ளனர்.