'சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை'
'சட்டசபை தேர்தலில் எந்த கட்சிக்கும் ஆதரவு இல்லை'
ADDED : ஏப் 14, 2026 03:50 PM
அ நிறம் | அளவு
தொண்டாமுத்தூர்: ஜாதி, மதம், கட்சி சார்பற்ற விவசாயிகள் சங்கத்தின் மாதாந்திர செயற்குழு கூட்டம், ஆறுமுககவுண்டனூரில் நடந்தது.
மாநில பொதுச்செயலாளர் கந்தசாமி தலைமை வகித்தார். இதில் நிறைவேற்றப்பட்ட தீர்மானங்கள்:
வரும் சட்டசபை தேர்தலில் வழக்கம் போல, எந்த கட்சிக்கும் ஆதரவு தெரிவிப்பதில்லை. இஸ்ரேல் நாட்டில் பயன்படுத்தப்பட்டு வரும் தொழில்நுட்பத்தை பயன்படுத்தி, நம் நாட்டில் உள்ள நீர் நிலைகளில் கழிவுநீர் கலப்பதை தடுத்து, சுத்திகரிக்கப்பட்ட நன்னீர் கலந்திட மத்திய அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். சங்கனூர் வாய்க்காலில் உள்ள ஆக்கிரமிப்புகளை அகற்ற வேண்டும்.
இவ்வாறு, தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
