தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/குப்பை கொட்ட இடமில்லை ஊராட்சி நிர்வாகம் திணறல்

குப்பை கொட்ட இடமில்லை ஊராட்சி நிர்வாகம் திணறல்

குப்பை கொட்ட இடமில்லை ஊராட்சி நிர்வாகம் திணறல்


UPDATED : நவ 10, 2026 09:50 AM

ADDED : நவ 10, 2026 09:46 AM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 10, 2026 09:50 AM ADDED : நவ 10, 2026 09:46 AM


Follow on Google
அ நிறம் | அளவு

கிணத்துக்கடவு: கிணத்துக்கடவு ஒன்றியம், கோவில்பாளையம் ஊராட்சியில், 3 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்கள் வசிக்கின்றனர். இங்கு சேகரிக்கப்படும் குப்பையின் ஒரு பகுதி மயானம் அருகே கொட்டப்படுகிறது.

தற்போது, இங்கு குப்பை கொட்ட மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், குப்பை சேகரித்து வைப்பதில் சிரமம் ஏற்பட்டுள்ளது. குறிப்பிட்ட சில பகுதியில், இடம் ஒதுக்கி குப்பை சேகரிக்க நடவடிக்கை எடுக்கப்பட்டது.

அதற்கு அந்தந்த பகுதி மக்கள் எதிர்ப்பு தெரிவித்ததால், சேகரிக்கப்படும் குப்பையை எங்கு கொட்டுவது என்று தெரியாமல் ஊராட்சி நிர்வாகத்தினர் திணறுகின்றனர்.

ஒன்றிய அதிகாரி ஒருவர் கூறுகையில், ‘கோவில்பாளையத்தில் சேகரிக்கப்படும் குப்பை முழுவதும், மயானம் பகுதியில் கொட்டி தரம் பிரிக்கப்பட்டது. மக்கள் எதிர்ப்பால் சிக்கல் ஏற்பட்டுள்ளது. ஒரு சில நாட்களில் மக்களுக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் குப்பை அகற்றம் செய்ய நடவடிக்கை எடுக்கப்படும்,’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us