/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
மேம்பாலம் சீரமைப்பில் வேகமில்லை; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
/
மேம்பாலம் சீரமைப்பில் வேகமில்லை; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
மேம்பாலம் சீரமைப்பில் வேகமில்லை; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
மேம்பாலம் சீரமைப்பில் வேகமில்லை; வாகன ஓட்டுநர்கள் பாதிப்பு
ADDED : நவ 18, 2024 10:22 PM

குப்பை தேக்கம்
உடுமலை மாரியம்மன் கோவில் எதிரே கழிவு நீர் ஓடையில், குப்பை தேங்கி அகற்றப்படாமல் உள்ளது. இதனால், துர்நாற்றம் வீசி நோய் பரவும் அபாயம் ஏற்பட்டுள்ளது. எனவே, குப்பையை அகற்ற நகராட்சியினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- செல்வம், உடுமலை.
நிழற்கூரை இல்லை
உடுமலை, கொழுமம் பிரிவு ரோட்டில், பஸ் ஸ்டாப் நிழற்கூரை இல்லாததால், பயணியர் அவதிப்படுகின்றனர். அப்பகுதியில் பள்ளி செல்லும் மாணவர்களும் அதிகம் பஸ்சுக்கு காத்திருக்கின்றனர். நிழற்கூரை இல்லாததால் மழை நாட்களில் பள்ளி மாணவர்கள் காத்திருப்பதற்கு இடமில்லாமல் சிரமப்படுகின்றனர்.
- சுகுமார், உடுமலை.
ரோடு சேதம்
உடுமலை, செல்லம் நகரில் ரோடு மிகவும் சிதிலமடைந்து குண்டும் குழியுமாகியுள்ளது. இதனால் மழை நீர் குழிகளில் தேங்குகிறது. இரவு நேரங்களில் அவ்வழியாக செல்லும் வாகன ஓட்டுநர்கள் குழி இருப்பது தெரியாமல் அடிக்கடி தடுமாறி விபத்துக்குள்ளாகின்றனர்.
- சாந்தி, உடுமலை.
வீணாகும் குடிநீர்
உடுமலை அருகே குடிமங்கலத்தில் கூட்டுக்குடிநீர் திட்ட குழாய் உடைந்துள்ளது. இதனால், ஆயிரக்கணக்கான லிட்டர் குடிநீர் வீணாகி வருகிறது. எனவே, குழாய் உடைப்பை சரிசெய்ய குடிநீர் வடிகால் வாரியத்தினர் நடவடிக்கை எடுக்க வேண்டும்.
- சண்முகம், உடுமலை.
தெருநாய்கள் அதிகரிப்பு
உடுமலை, கணக்கம்பாளையம் எஸ்.வி., புரம் பகுதியில் தெருநாய்கள் எண்ணிக்கை அதிகரித்து விட்டது. தெருநாய்கள் வீடுகளின் முன்பு அடிக்கடி அசுத்தம் செய்வதுடன், குப்பைக்கழிவுகள், இறைச்சிக்கழிவுகளை பரப்பி சுகாதார சீர்கேட்டை ஏற்படுத்துகின்றன. மேலும், இரவு நேரங்களில் வீதியில் பொதுமக்கள் நடந்துசெல்ல முடியாத வகையில் துரத்துவதால் அச்சத்துக்குள்ளாகின்றனர்.
- ராம்குமார், உடுமலை.
சுகாதார சீர்கேடு
உடுமலை, ஏரிப்பாளையம் அரசு பள்ளி அருகே குப்பைக்கழிவுகள் தொடர்ந்து கொட்டப்படுதால், பள்ளி வளாகத்தில் மிகுதியான துர்நாற்றம் வீசுகிறது. கழிவுகள் குவிந்து கிடப்பதால் சுகாதார சீர்கேடும் ஏற்படுகிறது. மழை நாட்களில் கழிவுகளில் மழைநீர் தேங்கி நோய் பரவும் சூழலும் உண்டாகிறது.
- ஜெய்கணேஷ், கணக்கம்பாளையம்.
கழிவு நீர் தேக்கம்
பொள்ளாச்சி, கால்நடை மருத்துவமனை முன்பாக கழிவு நீர் தேங்கி இருப்பதால் அப்பகுதியில் பொதுசுகாதாரம் பாதிக்கப்பட்டுள்ளது. மற்றும் அவ்வழியில் நடந்து செல்லும் போது கடும் துர்நாற்றம் வீசுவதால் மக்கள் அதிருப்தி அடைந்துள்ளனர். நகராட்சி நிர்வாகம் இதை கவனித்து சீரமைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும்.
-- -டேனியல், பொள்ளாச்சி.
ரோட்டில் விரிசல்
கிணத்துக்கடவு செக்போஸ்ட்டில் இருந்து, மின் வாரிய அலுவலகம் செல்லும் வழி அருகில் சர்வீஸ் ரோட்டில் விரிசல் ஏற்பட்டுள்ளது. இதனால் இரவு நேரத்தில் செல்லும் வாகன ஓட்டுநர்கள் பாதிக்கப்படுவதுடன், சிலர் தடுமாறி கீழே விழுகின்றனர். இதை தேசிய நெடுஞ்சாலைத்துறை அதிகாரிகள் ஆய்வு செய்து சீரமைக்க வேண்டும்.
-- -கவின், கிணத்துக்கடவு.
வேகத்தடை அருகே பள்ளம்
கிணத்துக்கடவு -- கோதவாடி செல்லும் ரோட்டில் வேகத்தடை அருகே ரோடு சேதம் அடைந்து, பள்ளமாக உள்ளது. கனரக வாகனங்கள் இவ்வழியில் பயணிப்பதால் ரோடு மேலும் சேதம் அடைந்து வருகிறது. எனவே, வாகன ஓட்டுநர்கள் நலன் கருதி இதை விரைவில் சரி செய்ய வேண்டும்.
-- -முருகன், நெகமம்.
புதரை அகற்றுங்க!
வால்பாறை நகரில் ஆங்காங்கே சிறுத்தை நடமாட்டம் இருப்பதால், அப்பகுதி மக்கள் நலன் கருதி நகரை சுற்றியுள்ள பகுதியில் இருக்கும் புதர்களை நகராட்சி நிர்வாகம் சார்பில் அகற்றம் செய்து, சுத்தப்படுத்த வேண்டும்.
-- -குமரன், வால்பாறை.
பணியில் வேகமில்லை!
பொள்ளாச்சி - பாலக்காடு ரோட்டில், வடுகபாளையம் பிரிவு அருகே, ரயில்வே மேம்பாலத்தில், சேதமடைந்த இரும்பு சட்டங்களை மாற்றியமைக்கும் பணி ஒருசில பணியாளர்களை கொண்டு மெதுவாக நடக்கிறது. இதற்காக போக்குவரத்து மாற்று வழித்தடத்தில் இயக்கப்படுகிறது. முக்கிய வழித்தடம் என்பதால், அதிக பணியாளர்களை நியமித்து, பணியை வேகப்படுத்தி நிறைவு செய்ய வேண்டும்.
-- சரண்யா, பொள்ளாச்சி.
ரோட்டோரத்தில் குப்பை
பொள்ளாச்சி, மார்க்கெட் ரோடு செல்லும் வழியில் ரோட்டின் ஓரத்தில் குப்பையை மூட்டைகளாக கட்டி வைக்கின்றனர். இதனால், அங்கு துர்நாற்றம் வீசுவதுடன், நோய் பரவும் அபாயம் ஏற்பட வாய்ப்புள்ளது. இதை நகராட்சி நிர்வாகம் கவனித்து, அகற்றம் செய்ய வேண்டும்.
-- -கந்தசாமி, பொள்ளாச்சி.