தினமலர்
சினிமா
டிவி
Podcast
iPaper
கோயில்கள்
புத்தகங்கள்
Subscription
திருக்குறள்
கடல் தாமரை
Dinamalar Logo

 

/உள்ளூர் செய்திகள்/கோயம்புத்தூர்/பணி நியமனம் செஞ்சாங்க 4 மாதமா சம்பளம் வரலையே ! அடிப்படை பணியாளர்கள் வேதனை

பணி நியமனம் செஞ்சாங்க 4 மாதமா சம்பளம் வரலையே ! அடிப்படை பணியாளர்கள் வேதனை

பணி நியமனம் செஞ்சாங்க 4 மாதமா சம்பளம் வரலையே ! அடிப்படை பணியாளர்கள் வேதனை


UPDATED : நவ 07, 2026 12:00 AM

ADDED : நவ 06, 2026 09:44 PM

Follow on GoogleFavourite on Google

UPDATED : நவ 07, 2026 12:00 AM ADDED : நவ 06, 2026 09:44 PM


Follow on Google
Latest Tamil News
அ நிறம் | அளவு

கோவை: கோவை மண்டலத்தில் ஆறு கல்லுாரிகளில், புதிதாக நியமிக்கப்பட்ட அடிப்படை பணியாளர்களுக்கு ஊதியம் விடுவிக்கப்படவில்லை என அதிருப்தி எழுந்துள்ளது.

கல்லுாரி கல்வி இயக்குனரக உத்தரவின் படி கடந்த ஜூலை மாதம், பொள்ளாச்சி, அந்தியூர், தாளவாடி, தாராபுரம், ஈரோடு, குன்னுார் ஆகிய அரசு கல்லுாரிகளில் இரவு காவலர், துாய்மை மற்றும் துப்புரவு பணியாளர்கள் 4 பேர் வீதம் அவுட்சோர்சிங் முறையில் பணிநியமனம் செய்யப்பட்டனர்.

பணிநியமனம் செய்ய அனுமதி அளித்த கல்லுாரி கல்வி இயக்குனரகம் இதுவரை ஊதியம் வழங்குவதற்கான நடவடிக்கை எடுக்கவில்லை. அவுட்சோர்சிங் நிறுவனத்திற்கு அரசு ஊதியம் விடுவித்தால் மட்டுமே அடிப்படை பணியாளர்களுக்கான ஊதியம் கிடைக்கும்.

இவர்களுக்கு நாள் ஒன்றுக்கு, தினக்கூலியாக 375 ரூபாய் வீதம், 11, 250 ரூபாய் ஊதியம் நிர்ணயிக்கப்பட்டது. ஆனால், கடந்த நான்கு மாதங்களாக ஊதியம் வழங்கப்படவில்லை.

இதுகுறித்து, பணியாளர் ஒருவர் கூறுகையில், ‘ பணிநியமனம் செய்யப்பட்டது முதல் தற்போது வரை ஊதியம் வழங்கவில்லை. கல்லுாரி பெற்றோர் ஆசிரியர் கழகத்தில் இருந்து கடனாக 5000 ரூபாய் வழங்கப்படுகிறது. தீபாவளி சமயத்தில் இதுபோன்று சிக்கலில் மாட்டிக்கொண்டோம். செய்யும் வேலைக்கு ஊதியம் சரியான நேரத்தில் வழங்க நடவடிக்கை எடுக்கவேண்டும், ’ என்றார்.

கோவை மண்டல கல்லுாரி கல்வி இணை இயக்குனர் செண்பகலட்சுமி கூறுகையில், ‘‘ பெற்றோர் ஆசிரியர் கழகம் மூலம் ஊதியம் வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இதுகுறித்து கல்லுாரி கல்வி இயக்குனரகத்திற்கும் தெரிவித்து தொடர்ந்து பாலோ செய்து வருகிறோம். விரைவில் ஊதியம் வழங்கப்படும், ’’ என்றார்.

தினமலர் WhatsApp Channel-ல் சேருங்கள்
Latest Tamil news, instantly on WhatsApp
Follow





      Dinamalar
      Follow us