UPDATED : நவ 07, 2026 12:00 AM
ADDED : நவ 06, 2026 09:44 PM
அ நிறம் | அளவு
கோவை: தீபாவளி பண்டிகையை முன்னிட்டு பயணிகள் வசதிக்காக போத்தனுார்–பரூணி இடையே சிறப்பு ரயில் இயக்கப்படுகிறது. போத்தனுாரில் இருந்து இன்று இரவு 9:55க்கு புறப்படும் ரயில்(06079) வரும் 10ம் தேதி காலை 9:00க்கு பீஹார் மாநிலம் பரூணி அடைகிறது.
பரூணியில் இருந்து வரும் 10ம் தேதி இரவு 11:30க்கு புறப்படும் ரயில்(06080) 13ம் தேதி காலை 9:15க்கு போத்தனுார் அடைகிறது. திருப்பூர், ஈரோடு, சேலம், ரேணிகுண்டா, விஜயவாடா, நாக்பூர், ஜபால்பூர் உள்ளிட்ட ஸ்டேஷன்களில் இந்த ரயில் நின்று செல்லும் என, தென்னக ரயில்வே தெரிவித்துள்ளது.
