/
உள்ளூர் செய்திகள்
/
கோயம்புத்தூர்
/
நகை பறிக்க முயன்ற வடமாநிலத்தவர் கைது
/
நகை பறிக்க முயன்ற வடமாநிலத்தவர் கைது
ADDED : ஏப் 01, 2025 10:21 PM
கிணத்துக்கடவு; கிணத்துக்கடவு, அரசம்பாளையம் அருகே மூதாட்டியிடம் நகை பறிக்க முயன்ற வட மாநிலத்தவரை போலீசார் கைது செய்தனர்.
பீஹார் மாநிலத்தை சேர்ந்தவர் மகேந்திரா ராம், 49. இவர், கடந்த இரண்டு நாட்களுக்கு முன் அரசம்பாளையம் பகுதியில் உள்ள தனியார் கம்பெனிக்கு வேலைக்கு வந்தார்.
நேற்று முன்தினம் அதிகாலை நேரத்தில், அரசம்பாளையம் பகுதியில் நோட்டமிட்டுக்கொண்டிருந்த மகேந்திரராம், அங்குள்ள வெங்கடேஸ்வரி என்பவரது வீட்டிற்கு சென்று, பேச்சுக் கொடுத்துள்ளார். அப்போது, திடீரென, வெங்கடேஸ்வரியின் கழுத்தில் ரீப்பர் கட்டையை வைத்து நசுக்கி, தாலி செயினை பறிக்க முயன்றுள்ளார்.
அவரது அலறல் சப்தம் கேட்டு, அருகில் இருந்தவர்கள் ஓடி வந்து மகேந்திரராமை தள்ளி விட்டு, வெங்கடேஸ்வரியை மீட்டனர். காயமடைந்த அவரை பொள்ளாச்சி அரசு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதித்தனர்.
மேலும், செயின் பறிக்க முயன்றதாக வழக்குப்பதிவு செய்து, மகேந்திரராமை போலீசார் கைது செய்தனர்.

